Home சுடச்சுட இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

18
0
SHARE

சென்னை, நவ. 20&  இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது என்று துணை முதல்வர் பேசினார். சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற  ஐக்கிய பொருளாதாரப் பேரவை உச்சிமாநாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியாவில் மிகவும் மேம்பட்ட முன்னேறி வரும் மாநிலங்களில் தமிழகம் ஒன்று என்பதை அனைவரும் அறிவர். மக்கள் தொகையை பொறுத்தவரையில் மிகப்பெரிய 7 வதுமாநிலம் என்ற நிலையிலும் இந்தியாவில் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் மிகப்பெரிய 2 வது மாநிலமாகும்.விரிவடைந்த தொழில்துறை அடித்தளம் தமிழ்நாட்டில் உண்டு. இதற்கு மேலாக நன்கு அதிகம் படித்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம். சிறுபான்மையினரும் பெருமளவில் பலன் பெறும் விதத்தில் கொள்கைகளைப் பின்பற்றி வரும் மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவில் ஜவுளி, தோல், ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் கனரக இலகுரக இன்ஜினீயரிங்எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் இணைந்த சேவைகள், சுகாதார பாதுகாப்பு ஆகிய பல்வேறு தொழிற்துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது.இந்திய பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் அதில் பொருளாதாரத்தில் சர்வீஸ் செக்டாரில்  பங்கு அதிக அளவில் உள்ளது. இதேபோல நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.உண்மையைச் சொல்வதென்றால் வெளிநாட்டு முதலீடு தமிழ்நாட்டுக்கு இன்னும்அதிகமாக வரும். ஆனால் சில வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய தலைமைஅலுவலகங்கள் வேறு மாநிலத்தில் அமைந்திருப்பதால் நமக்கு வரும் நேரடிமுதலீட்டுத் தொகை குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னணி மாநிலமாக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதில் ஒன்று தான் 2012ல் அவர் துவக்கிய ‘தொலை நோக்கு திட்டம் 2023’.2023 ம் ஆண்டுக்குள் நடுத்தர மேல் வருமான நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதே இந்த தொலைநோக்கு திட்டத்தின் நோக்கம்.

2014 ம் ஆண்டில் புதிய தொழிற்துறை கொள்கை செயல்படுத்தப்பட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்பட சூழலுக்கு ஏற்ப வரும் அம்சங்களையும் கருத்தில்கொண்டு கொள்கையை சீரமைத்து செயல்படுத்தி வருகிறோம்.ஆட்டோ, ஆட்டோ உதிரி பாகங்கள், உயிரி தொழில்நுட்பம், ஏதோ ஸ்பேஸ்ராணுவத் தயாரிப்பு உள்பட புதிய செயல்திட்டங்களும் வரைவுக் கொள்கையில்இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.நாம் இன்று நாட்டிலேயே கல்வியில் சிறந்ததிறமையான வேலை சக்தியை கொண்ட மாநிலமாக இருக்கிறோம். அதே போல் மாநிலத்தில்சுகாதார அளவுகோல்கள் நாட்டிலேயே சிறந்ததாக அமைந்துள்ளது. நமது கொள்கையின்காரணமாக மாநிலத்தில் தொழிற்சாலைகள் வளர்ந்துள்ளது. நாட்டிலேயேதமிழகத்தில் தான் தொழில் உறவு அமைதியானதாகவும் சீரானதாகவும் இருக்கிறது.தமிழகத்தில் தான் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன.

அந்த தொழிற்சாலைகள்மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறு, குறு,நடுத்தர நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2014 மற்றும் 2015 ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 104 புதிய தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.இது 2016 & 17ம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.மாநிலத்தில் முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்த தமிழ்நாடு தொடர்ந்து கடினமாக பணியாற்றி வருகிறது.

இதற்காக நாம் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தை வடிவமைத்து வெற்றிகரமாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.இந்த யு.இ.எப். வர்த்தக உச்சி மாநாட்டின் மூலம் தமிழகத்தில் முதலீடு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். இந்த மாநாட்டில் 71 ஆயிரத்து 750 கோடி அளவிலான முதலீடுகளை செய்ய முதலீட்டு கமிட்டி அறிவித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று 2600 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.ஒருங்கிணைந்த சுகாதார நிதி, தனியார் சமநிதி, சரியா நிதி ஆகியவற்றின் வழியாக முதலீடுகளை யு.இ.எப். மேம்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கட்டமைப்பு நிதி அமைப்பை செபி ஒப்புதலுடன் செயல்படுத்தி வருகிறோம்.தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனமானது அரசின் பல்வேறு அமைப்புகளுடனும் தனியாருடனும் இணைந்து தொழிற்சாலைக்கான தண்ணீர், தொழிற்பூங்கா, மெகா கிரீன் எனர்ஜிமற்றும் அது தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.முதல் கட்டமாக உள்ளூர் முதலீட்டாளர் மூலம் நிதி சேகரிக்கப்படுகிறது.

முதல் முதலீடு திட்டம் அடுத்த காலாண்டுக்குள் செயல்படுத்தப்படும். தற்போது சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு  பேசினார்.பேரவையின் தலைவர் அகமது ஏ.ஆர். புகாரி, பன்னாட்டு தொழிற்நிறுவனங்கள்,தமிழக தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் பேசினார்கள்.