Home மற்றவை திட்டமிட்டப்படி ‘ஜாக்டோ ஜியோ’ இன்று வேலை நிறுத்தம்

திட்டமிட்டப்படி ‘ஜாக்டோ ஜியோ’ இன்று வேலை நிறுத்தம்

22
0
SHARE

சென்னை, ஆக. 22& அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்தியாளர்களிடம், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசினை பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. 1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டத்தினையேத் தொடர்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையினைப் பெற்று, அனைத்துபணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

மத்திய அரசு ஏழாவது ஊதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, ஊதிய மாற்றம், படிகள் உட்பட அமல்படுத்தியது போல், தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தினை, ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அமுல்படுத்திட வேண்டும். ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணத்தினை 1.1.2016 முதல் உடனடியாக அறிவித்திட வேண்டும்.

சிறப்புக் கால முறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றைஅறவே ஒழித்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆசிரியர்கள்அரசு ஊழியர்கள் கலந்து  கொண்டு ஜூலை 18 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இதனைத் தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட  ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காவல்துறையினரின் அடக்குமுறைகளையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் அராஜகப் போக்கினையும் மீறி, தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அணி திரண்டு வந்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவிற்கு புதிய தலைவரை நியமித்ததையும் அவர் நவம்பர் இறுதிக்குள் அறிக்கை அளிப்பார் என்பதையும் ஜாக்டோ ஜியோ அமைப்பு முற்றிலுமாக நிராகரிக்கிறது. எனவே இன்று  ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தினை திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட ஐ..எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் வேறொரு குழுவை அரசு அமைத்துள்ளது. இது எங்களை ஏமாற்றம் வேலை. அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14,500 கோடி எங்கிருக்கிறது என தெரியவில்லை. அந்த பணத்தை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாற்றி அமைக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அறிவித்த உடனே தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டியின் பதவி காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கும் விவகாரத்திலும் அரசு எங்களை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு முரண்பாடு முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதை நிறைவேற்றுவதிலும் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. இதையெல்லாம் கண்டித்து இன்று  ஒருநாள் அடையாள போராட்டம் நடத்துகிறோம். இதன்பிறகும் அரசு எங்களை கண்டுகொள்ளாவிட்டால் அடுத்த மாதம் 7 ந்  தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்

கடந்த 2003ல்  1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேலான ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் தங்களது உரிமைகளைக் காப்பதற்காக போராடியபோது, தமிழக அரசு எஸ்மா டெஸ்மா போன்ற கொடுங்கோல் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி, பணிநீக்கம் செய்தது.

இதன் அடிப்படையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்கள்அரசு ஊழியர்களது உரிமைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உணர்வோடும் அர்பணிப்போடும் இன்று திட்டமிட்டப்படி நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள்அரசு ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்பர் என தெரிவித்தார்.