Home சுடச்சுட போயஸ்கார்டனில் நள்ளிரவில் சோதனை…!

போயஸ்கார்டனில் நள்ளிரவில் சோதனை…!

19
0
SHARE

தாத்தாவுக்கு இரவு 10மணிக்கு செல்போனில் அழைப்பு வர, அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றார். நள்ளிரவு 2மணிக்கு தான் திரும்பினார். 17&ம் தேதி இரவு  வருமான வரித்துறை அதிகாரிகள், காவல்துறையினருடன் போயஸ்கார்டனுக்குள் நுழைந்தார்கள்.. அதிரடியாக போயஸ்கார்டனில் உள்ள அறைகளை சோதனை செய்தார்கள். சிறிது நேரத்தில் இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா மற்றும் பூங்குன்றன் ஆகியோர் அழைத்து வரப்பட்டார்கள்.

வருமானவரித்துறைஅதிகாரிகள்மூவரையும்வைத்துக்கொண்டுசோதனைசெய்தார்கள்.. ஜெயலலிதாவின் அறைகளை திறக்க, விவேக் அனுமதிக்கவில்லை. நள்ளிரவு 2மணி வரை சோதனை நீடித்தது. லேப் டாப், இரண்டு பென் டிரைவ்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளார்கள். வருமான வரித்துறை போயஸ்கார்டனில் ரெய்டு நடத்தியிருக்க வேண்டாம் சில வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியும், மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் ரெய்டுக்கு கீரின் சிக்னல் காட்டியுள்ளார்..

வெற்றிவேல், கலைராசன் உள்ளிட்ட அ.தி.மு.. நிர்வாகிகள் குவிந்தார்கள். மத்திய அரசுக்கும், எடப்பாடி, .பன்னீருக்கு எதிராக கோஷங்கள் போட்டார்கள். என்று இளைஞர்களிடம் நள்ளிரவு சம்பவங்களை விவரித்தார் தாத்தா.

இளைஞர்கள்தமிழ்நாட்டில்என்னநடக்குதுதாத்தா…? என்று ஆவேசமாக கேட்டார்கள்.. தாத்தா சிரித்துக் கொண்டே அதுதான் எனக்கும் ஒண்ணும் புரியவில்லை என்றார்.

  தி.மு.. ஆட்சியில் மின் மீட்டர் ரூ576.19 லிருந்து ரூ624 வரை கொள்முதல் செய்துள்ளார்கள்.. அமைச்சர் தங்கமணி சொன்னது சரிதான். மின் மீட்டர் கொள்முதல் தொடர்பாக சி.பி.. விசாரணைக் கேட்டு, சில சமூக ஆர்வலர்கள் வழக்கு போட முடிவு செய்துள்ளார்கள்.. மின் மீட்டர் கொள்முதலில் தி.மு.., .தி.மு.. இரண்டு ஆட்சிகளிலும் ஊழல் நடந்துள்ளது என்ற தாத்தாவிடம், இளைஞர்கள் தாத்தா தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வழி இல்லையா தாத்தா என்று கேட்டனர்.

அதற்கு தாத்தா இல்லை என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து போய் உள்ளார்கள்.. மின்சாரவாரிய சேர்மன் நிலுவையில் உள்ள, 550 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தினால்தான், திண்டுக்கல்லில், முதல்வர் துவக்கி வைக்க உள்ள, கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, மின் சப்ளை தரப்படும் என, மின் வாரியம் கடிதம் அனுப்பிவிட்டது.

  தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தண்ணீர் சுத்திகரிப்பு, குடிநீர் சப்ளை உள்ளிட்டவற்றிற்கு தேவையான மின்சாரத்தை, மின் வாரியம் சப்ளை செய்கிறது. மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளாக, குடிநீர் வாரியம், 550 கோடி ரூபாய்க்கு மேல், மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளது.

இதையடுத்து, குடிநீர் வாரியத்திற்கு, புதிய மின் இணைப்பு வழங்க, மின் வாரியம், சமீபத்தில், அதிரடியாக தடை விதித்து, உத்தரவிட்டது என்று மெதுவாக இளைஞர்களிடம் கூறினார் தாத்தாஞ் பயங்கரவாதிகளால் மத்திய அரசின் இணையதளங்கள் முடக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.   சென்னை மண்டல சுங்கத்துறையின் இணையதளத்தை, விஷமிகள் முடக்கினர். அத்துடன், இணையதள முகப்பில், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகத்தையும், பதிவிட்டிருந்தனர். அதில், ‘காஷ்மீர் விடுதலையே தங்கள் இலக்கு; காஷ்மீரில் இந்திய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்என, குறிப்பிட்டிருந்தனர். இணையதளத்தை முடக்கியவர்கள் பாக்., ஆதரவு பயங்கர வாதிகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இணையதளத்தை மீட்கும் முயற்சிகள், உடனடியாக முடுக்கி விடப்பட்டன. ‘இதுபோன்ற இணையதள தாக்குதல்களை தடுக்கும் வகையில், அதி நவீன மென்பொருள்களை உருவாக்க வேண்டும்‘. ஆனால் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இனி இணையதளங்களை முடக்க முடியாது என்று அறிக்கை வெளியிடுவதோடு சரி..

திருவள்ளூர்மாவட்டத்தில் 17 வயதில் அரசு பணியில் சேர்ந்த ஒருவர் தற்போது தாசில்தார் ஆகிவிட்டார். அரசு பணியில் இருக்கும் போது, தந்தை இறந்துவிட்டதால், அவருக்கு பணி கொடுக்கப்பட்டது. பிளஸ் டூ தேர்வு எழுதி ரிசல்ட் வந்தவுடன் அரசு பணி கொடுக்கப்பட்டுவிட்டது. பாய்ஸ் சர்வீஸ் பணி கொடுத்து, 18 வயது ஆனவுடன் நிரந்தர பணி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 17 வயதில் நிரந்தரபணி கொடுத்த காரணத்தால், பல அதிகாரிகள் சிக்கியுள்ளார்கள்..

இதுதொடர்பானவிசாரணையைவருவாய்நிர்வாகஆணையர்நடத்திவருகிறார். என்று சொல்லியபடி இரவு முழுவதும் தூங்கவில்லை, அதனால் ஒய்வெடுக்க போகிறேன் என்று இளைஞர்களை அனுப்பி வைத்தார் தமிழ் தாத்தா.