Home அரசியல் தமிழக அரசியலில் அதிசயம்…! கட்சி தொடங்கும் முன்பு பணம் வாங்குவது சட்டவிரோதம்: ரசிகர்கள் வழங்கிய ரூ.30...

தமிழக அரசியலில் அதிசயம்…! கட்சி தொடங்கும் முன்பு பணம் வாங்குவது சட்டவிரோதம்: ரசிகர்கள் வழங்கிய ரூ.30 கோடி!  நடிகர் கமலஹாசன் திருப்பி கொடுக்கிறார்

39
0
SHARE

கட்சி தொடங்கும் முன்பு பணம் வாங்குவது சட்டவிரோதம் என்றும் ரசிகர்கள் வழங்கிய ரூ.30 கோடியை திருப்பி அவர்களிடமே கொடுத்து விடுவதாகவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத அதிசயமாகும்.

சென்னை, நவ. 18&

நடிகர்கமலஹாசன்புதியஅரசியல்கட்சியைத்தொடங்குவதற்கானஆரம்பகட்டபணிகளில்மிகவும்தீவிரமாகஈடுபட்டிருக்கிறார்.

கட்சி உறுதி

தான் தொடங்கும் கட்சிக்கு என்ன பெயர் சூட்டுவது? எத்தகைய கொள்கைகளை வரையறுப்பது? கட்சியை எப்படி வழிநடத்தி செல்வது? என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கமலஹாசன்புதியகட்சிதொடங்குவதுஉறுதியாகிவிட்டதால்அவரதுரசிகர்கள்மிகவும்உற்சாகம்அடைந்துள்ளனர். அவர்கள் கமலை வரவேற்று முக்கிய நகரங்களில் போஸ்டர்கள், பதாகைகள் அமைத்துள்ளனர்.

ரூ.30 கோடி

அது மட்டுமின்றி கமலஹாசனுக்கு உதவும் வகையில் செயல்பட அவரது நற்பணி மன்ற நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர். இந்த நற்பணி மன்றம் கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் இதுவரை தமிழகத்தில் பல்வேறு நற்பணிகளுக்காக ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

சமீபத்தில்கமல்ஹாசன்தனதுபுதியகட்சிதொடக்கம்பற்றிகூறுகையில், “நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்என்று கூறினார். மக்களிடம் இருந்து கட்சிக்காக ரூ.30 கோடி திரட்ட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கேட்டதும் அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது.

பணத்தை விரும்பாத கமல்

அவர்கள்சுமார்ரூ.30 கோடி வசூலித்து இருப்பதாக தெரிகிறது. இது தவிர ரசிகர்களும், பொதுமக்களும் கமலஹாசனுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பணத்தை ஏற்றுக் கொள்ள கமலஹாசன் விரும்பவில்லை.

தனக்கு வந்துள்ள பணத்தை யார்  யார் அனுப்பினார்களோ, அவர்களுக்கே திருப்பி அனுப்ப கமலஹாசன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நற்பணி மன்றத்தினரின் ரூ.30 கோடி மற்றும் மக்கள் அனுப்பிய பணத்தை திருப்பி கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:&

குழம்பிவிடக்கூடாது

கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதைரசிகர்கள் கொடுப்பார்கள்என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது  என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.

எனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கி விட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை. எனக்கு வந்துள்ள பணத்தை நான் வெறுமனே சும்மாவும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் அந்த பணத்தை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

தொடக்கூடாது

எனது இந்த செயலால் நான் பணத்தை வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. முன் வைத்த காலை பின் வைத்து விட்டேன் என்றும் அர்த்தம் இல்லை. கட்சித் தொடங்குவதற்கான சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தைத் தொடக்கூடாது.

இப்போதைக்கு அந்த பணத்தை என்னுடைய பணம் என்று நினைத்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதற்குள் நீங்கள் அந்த பணத்தைத் செலவு செய்து விட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகி விட்டது. ஆனால் கட்ட மைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போதுசிலஇயக்கங்களில் நடக்கும் குளறு படிகள் போல நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி அனுப்புகிறேன்இவ்வாறுநடிகர்கமல்ஹாசன்கூறியுள்ளார்.

இது பற்றி கமலஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:&

விருப்பம்

இவ்வளவுபெரியதொகையைநான்சுயமாகதனிநபராகநின்றுதிரட்டமுடியாது. எனவே தான் எனது கட்சியை நடத்த பொதுமக்களே பணம் தர வேண்டும் என்று விரும்புகிறேன்அரசியலில்எனதுகொள்கை, லட்சியம் பற்றி விரைவில் எனது ரசிகர்கள் மக்களை சந்தித்து விளக்கமாக சொல்வார்கள். அதன்பிறகே மக்களிடமிருந்து பணம் பெறப்படும்இதற்கிடையே மக்களை சந்தித்து பேச விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். மக்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் செல்வேன். மக்கள் என்னை வாரணாசிக்கு வரச்சொன்னாலும் தயங்காமல் செல்வேன்.  இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.