Home சம்பவம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

23
0
SHARE

விருத்தாசலம்,  நவ. 17& விருத்தாசலத்தில் தனது வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு தரக்கோரி 50 வயது மதிப்புள்ள பெண் தீக்குளிக்க முயன்றார் பக்கத்தில்  இருந்தவர்கள் காப்பாற்றி  மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம்  வீரபாண்டியன் தெருவைசேர்ந்தவர் ராமசந்திரன்  மனைவி பூங்காவனம் (வயது 50)  இவர் விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் வசித்து வருகிறார்  கடந்த  நான்கு  ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ராமசந்திரன் இறந்துவிட்டார்.இவர் வசிக்கும் கூரை வீடு தற்போது பெய்து வரும் பருவ  மழையில் ஒழுகுவதால் கூரையை பிரித்து மீண்டும் புது கூரை மேய்வதற்கு பிரித்துள்ளார் இந்நிலையில்  பக்கத்து வீட்டில் வசிக்கம்  இவரது கணவரின் தம்பி வீட்டை புதிய கூரை போட்டு வேயக் கூடாது என்று தடுத்துள்ளார்.அதனால் பூங்காவனம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரை பெற்ற விருத்தாசலம்  போலீசார் ராமசந்திரன் தம்பியிடம்  நேற்று  மாலை காவல் நிலையத்திற்கு வருமாறு  கூறி வந்துள்ளனர்.

பின்னர் போலீசார் சென்றவுடன் பூங்காவனத்திடம் கூரை வேயக்கூடாது என மீண்டும் ராமசந்திரன் தம்பி எச்சரித்து சண்டையிட்டதால் தனது பிள்ளைகளுடன்  மழையில் நனைந்தாவாறு  வீட்டில் கூரை இல்லாமல்    இருக்கிறேன் ஆகவே  என் வீட்டை எனது கணவரின் தம்பி அபகரிக்கிறார் ஆகவே எனது வீட்டை மீட்டு தரவேண்டும் என சத்தம் போட்டாவாறு  தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார்  அப்போது பக்கத்திலிருந்தவர்கள் வந்து பூங்காவனத்தை காப்பாற்றினர்விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணி சந்திரா அவருக்கு ஆலோசனை வழங்கி விருத்தாசலம் சிறப்பு உதவி ஆய்வாளர் பரமானந்தம் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கபட்டார்.