Home தமிழகம் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்குவதை முதல்வர் பழனிசாமி தவிர்க்க வேண்டும்விஜயகாந்த் வேண்டுகோள்

பணிநியமன ஆணைகளை நேரில் வழங்குவதை முதல்வர் பழனிசாமி தவிர்க்க வேண்டும்விஜயகாந்த் வேண்டுகோள்

43
0
SHARE

சென்னை, நவ. 17&

பணிநியமன ஆணைகளை நேரில் வழங்குவதை முதல்வர் தவிர்க்கவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 89 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்பட்ட பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலில் 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை தலைமை செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

ஆனால் தமிழக அரசு தேர்வாணையம், முதலில் பத்திரிக்கைகளின் மூலமாக விளம்பரம் செய்து விண்ணப்பங்களை பெற்று, தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்ற நபர்களை, பணிநியமனத் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட இலாக்காகளின் மூலம் தேர்வு பட்டியல் அனுப்பப்பட்டு, நியமன ஆணைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிவு தபால் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அனுப்புவது நடைமுறையில் இருந்தது. இவையாவும் ரகசிய பாதுகாப்பு முறையில் செயல்படும்.

ஆனால் தற்போது தமிழகத்தின் முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நியமன ஆணைகளைவழங்க சம்பந்தப்பட்டவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, நேரில்வழங்குவதை பத்திரிக்கைகள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளனர். இதனால் அரசின் பணிநியமன ரகசியங்கள் முன்கூட்டியே தெரியவாய்ப்புள்ளது.

இது அரசின் பணிநியமன பணிகளில் மேலும் லஞ்ச, லாவண்யத்தை தலைவிரித்தாடுகின்ற நிலையை ஏற்படுத்தும்.

எனவேமுதல்வர்எடப்பாடிபழனிச்சாமி  ஊழலுக்கு வழிவகுக்கின்றச் செயலான பணிநியமன ஆணைகளை, நேரில் வழங்குவதை தவிர்த்து, தேர்வாணையமே பதிவு தபால் மூலம் நியமன ஆணைகளை தேர்வு செய்யப்பட்டவருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.