Home தமிழகம் பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்ராமதாஸ் வலியுறுத்தல்

20
0
SHARE

சென்னை, நவ. 17&

பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும்  அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இவ்வழக்கில் எந்தக்குற்றமும் செய்யாத பேரறிவாளனை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதி வலை தாமதமானாலும் அறுத்தெறியப்பட்டிருக்கிறது.

இந்திய காவல் பணி அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் இது குறித்துதாக்கல் செய்த  விளக்க மனுவில், இராஜிவ் கொலை விசாரணையின் போதுபேரறிவாளன் எவ்வாறு சிக்க வைக்கப் பட்டார் என்பதை தெளிவாகவிளக்கியுள்ளார். ‘‘ பேரறிவாளன் என்னிடம் வாக்குமூலம் அளிக்கும்போது சிவராசன் கூறியவாறு இரு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கித் தந்ததாகக் கூறினார். அந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படப்போகின்றன என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் பேரறிவாளன் கூறினார்.

உண்மையில் அதுகுறித்து பேரறிவாளனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், அதை பதிவு செய்தால் அது பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு வகை செய்யும் வாக்குமூலமாக மாறி விடும் என்பதாலும்,  வாக்குமூலம் பெறப்பட்டதன் நோக்கத்தையே அது சிதைத்து விடும் என்பதாலும் பேரறிவாளன் கூறிய சில விஷயங்களை பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இதற்குப் பிறகும் பேரறிவாளனை சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்க முடியாது.எனவே, அவரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குமுன்பாகவே தமிழக அமைச்சரவை கூடி, அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவதுபிரிவின்படிபேரறிவாளனைவிடுதலைசெய்யபரிந்துரைக்கும்தீர்மானத்தைநிறைவேற்றி

தமிழக ஆளுனருக்கு அனுப்பி விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.