Home இந்தியா முதலீட்டாளர்கள் போட்டி போட்டு விற்பனை: பங்கு சந்தையில் சரிவு

முதலீட்டாளர்கள் போட்டி போட்டு விற்பனை: பங்கு சந்தையில் சரிவு

23
0
SHARE

மும்பை, ஆக. 22& முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையால், பங்கு சந்தையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.

கடந்த வார பங்கு சந்தை ஒரளவு லாபகரமாக சென்ற நிலையில், வர்த்தகத்தின் இறுதி நாளில் இன்போசிஸ் சி.இ.ஓ. திடீர் ராஜினாமா செய்தார். இதையடுத்து பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன.

இந்த நிலையில் முதல் நாள் வர்த்தகம் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. பங்கு சந்தை துவங்கியதும் சிறுது நேரத்தில் முதலீட்டாளர்கள் மிட்கேப் மற்றும் வங்கி, மெட்டல் மற்றும் ஐ.டி. துறையின் அதிகளவு பங்குகளை விற்பனை செய்தனர்.

இந்த அதீத பங்கு விற்பனை காரணமாக, பங்கு சந்தை திடீர் சரிவை சந்தித்தது. மும்பை பங்கு சந்தை 265.83 புள்ளிகள் சரிவை சந்தித்து 31258.85 என இருந்தது.

இதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 83.05 புள்ளிகள் குறைந்து வர்த்தக முடிவில் 9754.35 என இருந்தது. இந்த வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 5.37 சதவீதம் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

இதுமட்டுமின்றி சன் பார்மா, அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. ஆக்ஸிஸ் வங்கி, டிசி.எஸ். மகிந்திரா, எச்.டி.எப்.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகள் 0.05 முதல் 0.70 சதவீத உயர்வை சந்தித்தன