Home தலையங்கம் ஆட்டம் கண்ட இறையாண்மை…!

ஆட்டம் கண்ட இறையாண்மை…!

40
0
SHARE

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், காமராஜர், கக்கன் என தேசிய தலைவர்களின் மறைவிற்கு பிறகு, நம் நாட்டின் இறையாண்மை சற்றே ஆட்டம் காண தொடங்கி விட்டது.

அதற்கு என்ன காரணம் என்று என்றாவது சிந்தித்தது உண்டா.? பயங்கரவாதமா.? ஆம். பயங்கரவாதம் தான். ஊழல் என்னும் அதிநுட்ப பயங்கரவாதம். இதன் ஆணி வேர், பாரத தாயின் கழுத்தை சற்றே இறுக்கி பிடிக்க துணிந்து விட்டதுஇதனை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரியும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஊழல் குறித்து வாய்கிழிய பேசுகிறோம். வருடா வருடம் ஊழல் ஒழிப்பு வாரம் வேறுஇதெல்லாம் யாருக்காக. சீனி என்று வெறுமனே காகிதத்தில் எழுதி, நாக்கில் வைத்து நக்கினால் எப்படி இனிக்குமா.? ஊழல் குறித்த சட்ட திட்டங்களும் அவ்வாறுதான் இருக்கிறதோ.? என்ற பயம் எழுகிறது.

இதனை பயத்துடனே அணுகிறேன். இந்த நாடு ஊழல் பயங்கரவாதத்தால் சுடுகாடு ஆகாமல் தடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. ”ஊழலுக்கே ஊழல்”, ”விஞ்ஞான ஊழல்என நாம் பல்வேறு ஊழல்களை பார்த்து விட்டோம். அதற்கு பின்னரும் நாம் விழிக்காமல் இருப்பது, ஏனோ நாம் இதற்கு பழகிவிட்டோமோ? என்றே அச்சப்பட வைக்கிறதுரூ.10, ரூ.20 வாங்கும் போலீசாரின் ஊழல் குறித்து வாய்கிழிய கத்தும் அரசியல்வாதிகள், தங்களின் கோடிகளை பற்றி பேச்சு வரும் நவதுவாரங்களையும் மூடி விடுகின்றனர்.

அலுவலக உதவியாளர் ரூ.50 வாங்கினால் அடேய்.! என்று மனதுக்குள்ளாவது திட்டும் நாம் ஐ..எஸ். அதிகாரிகளை கண்டுக் கொள்வதில்லை. அஸ்ஸாமில், மாநில அரசின் துண்டு பிரசுரங்கள் அச்சடித்ததில் ரூ.121 கோடி வரை ஊழல் நடந்து உள்ளதுஇதுதொடர்பாக ஐ..எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுபோன்ற அரசியல் ஊழல்கள் ஆரம்ப கட்டத்திலே கிள்ளி எறியப்பட வேண்டும். அது என்னப்பா.? ஊழல் என்றால் எல்லாமே ஒன்றுதானே.. நீ என்ன புதுசா அரசியல் ஊழல் என்கிறார். என்றுதானே நினைக்கிறீர்கள்.!

அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரசு அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது.

உலகின் எந்த மூலையில் இந்த அரசியல் ஊழல்கள் இருப்பினும், அதனால் பாதிக்கப்படுவது, அந்நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மட்டுமே. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஒரு சம்பவம், சப்தமே இல்லாமல் அரங்கேறி உள்ளது. ஒரு ஐ..எஸ். அதிகாரி, விளையாட்டு மைதானம் அமைக்காமல் அமைத்து விட்டதாக கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதுஇந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டியது அவசியம்.