Home சம்பவம் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் உயிரோடு எரித்து கொலை  வெறிப்பிடித்த காதலன் கைது

திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் உயிரோடு எரித்து கொலை  வெறிப்பிடித்த காதலன் கைது

39
0
SHARE

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில்திருமணம் செய்ய மறுத்த, பெண் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. சென்னை, நவ, 15&

சென்னை,  ஆதம்பாக்கம் , சரஸ்வதி நகர்,  7&வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(50). இவரது மனைவி ரேணுகா(43). இவர்களுக்கு,  இந்துஜா ( 23), நிவேதா(21) மற்றும் மனோஜ் (16) என மூன்று பிள்ளைகள், இதில்,  இந்துஜா,  தனியார் கல்லூரி ஒன்றில்,  பி.டெக் படித்துவிட்டு,  வீட்டில் இருந்தார். நிவேதா தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். மனோஜ் 11&ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஐந்து வருட காதல்

இந்த நிலையில், இந்துஜா தனியார் பள்ளியில் படித்த போது,  வேளச்சேரி,  ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ஆகாஷ்(23) என்பவரை காதலித்ததாக தெரிகிறது. இருவரும்,  5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.  இவர்களின் காதல்,  இந்துஜாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. ஆகாசுக்கு, இந்துஜாவை திருமணம் செய்து வைக்க, முடிவு செய்தனர்.  இதனையடுத்து, ஆகாசின் நடவடிக்கைகள் சரியில்லை போனது.  அவரிடம் இருந்த காதலை முறித்துக்கொள்ளும்படி,  இந்துஜாவிடம், அவரது பெற்றோர் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

காதலை உதறினார்

இதனால்,   இந்துஜா, ஆகாசின் காதலை உதறி தள்ளினார்.  இதன் பின், அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம், ஆகாஷ்  பின்னால் வந்து  , இந்துஜாவுக்கு தொந்தரவு கொடுத்தாராம். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல முறை ரோட்டில் வைத்து, மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து இந்துஜா வீட்டிலும் கூறியிருக்கிறார்.

மிரட்டல்

இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு ரேணுகா, இந்துஜா, நிவேதா, மனோஜ் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஆகாஷ், இந்துஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தயாரிடம் மிரட்டினார்.  இதனால் அங்கு வாக்குவாதம் முற்றியது.

தீ வைத்தார்

ஒரு கட்டத்தில், உச்ச கட்ட ஆத்திரம் அடைந்த ஆகாஷ்,   தயாராக  எடுத்து வந்த டர்பன்டைன் ஆயிலை,  இந்துஜா மீது ஊற்றி உள்ளார். இதை பார்த்து, இந்துஜா குடும்பமே அலறியது, அவர்கள்  யாரையும் வீட்டை விட்டு வெளியேற விடாமல்,  கையில் வைத்திருந்த லைட்டரை பற்ற வைத்து, ஆகாஷ், இந்துஜா மீது தூக்கி எரிந்துள்ளார். லைட்டரில் பற்றி எரிந்த தீ, இந்துஜா மீது பட்டு, உடல் தீப்பிடித்தது. இந்துஜாவை காப்பாற்ற தாய் ரேணுகா,   தங்கை நிவேதா முயற்சி செய்துள்ளார். அவர்கள் மீதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆகாஷ் தப்பித்து சென்று விட்டார்.

சம்பவ இடத்தில் பலி

தீயில் கருகிய இந்துஜா , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்தகவல்கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் தீக்காயத்துடன் இருந்த ரேணுகா மற்றும் நிவேதாவை, உடனடியாக , கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்ரேணுகாமிகவும்பரிதாபமானநிலையில்சிகிச்சைபெற்றுவருகிறார்.மேலும் , தீயில் கருகி உயிரிழந்த  இந்துஜாவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காதலன் கைது

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பிச்சென்ற ஆகாசை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.