Home மற்றவை ‘திவயர்’ இணையதளம் மீது அவதூறு வழக்கு : அமித்ஷா மகன் ஜெய்ஷா நீதிமன்றம் வரததால்...

‘திவயர்’ இணையதளம் மீது அவதூறு வழக்கு : அமித்ஷா மகன் ஜெய்ஷா நீதிமன்றம் வரததால் சர்ச்சை

4
0
SHARE

அகமதாபாத், நவ. 15& தவறான கட்டுரை வெளியிட்டதாகதிவயர்இணையதளம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா, கோர்ட்டுக்கே வராமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷா மகன் ஜெய்ஷா நிறுவனத்தின் வர்த்தகம் திடீரென பல மடங்கு உயர்ந்ததாக சில ஆதாரங்களுடன்திவயர்என்ற ஆங்கில செய்தி வெப்சைட் சில வாரங்கள் முன்பு வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷாவுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர், விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில், தி வயர் இணையதளம் மீது அக்டோபபர் 9ம் தேதி அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஜெய்ஷா அவதூறு வழக்கு தொடர்ந்தார். ‘திவயர்இணையதள ஆசிரியர் மற்றும் நிருபருக்கு எதிராக அவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.இந்த அவதூறு வழக்கின் விசாரணை நடைபெற்றது.  அப்போது, ஜெய்ஷா கோர்ட்டுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். புகார்தாரர் ஏன் கோர்ட்டுக்கு வரவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, சமூக நிகழ்ச்சிகளில் அவர் பிஸியாக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஜெய்ஷா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், குற்றச்சாட்டுக்கு உள்ளான தரப்பில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.’இதனிடையே வழக்கு விசாரணை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here