Home சம்பவம் சுரங்கம் தோண்டி லாக்கரை உடைத்து வங்கிப்பணம் கொள்ளை

சுரங்கம் தோண்டி லாக்கரை உடைத்து வங்கிப்பணம் கொள்ளை

10
0
SHARE

மும்பை, நவ. 15& மும்பையில் இருக்கும் பேங்க் ஆப் பரோடாவில்  கொள்ளையர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்து இருக்கின்றனர்நவி மும்பையில் இருக்கும்ஜூனி நகர்பேங்க் ஆப் பரோடா கிளையில் வங்கியில் லாக்கர் இருக்கும் தரை பகுதி சுரங்கம் போல தோண்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

30க்கும் அதிகமா லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.இந்த கொள்ளை சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரவு என இரண்டு நாட்கள் நடந்து இருக்கிறது. சிறிய ரக மண்வெட்டியால் 25 ஆடி ஆழத்திற்கு பொறுமையாக பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்க பாதை இரண்டு நபர்கள் செல்லும் அளவுக்கு அகலமாக இருந்துள்ளது.

மேலும் பக்கத்து கடையை இணைக்கும் வகையில் இந்த சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது. இதன் வழியாக கொள்ளையர்கள் உடைத்த அனைத்து லாக்கர்களையும் தூக்கி சென்று இருக்கின்றனர்.இந்த திட்டத்திற்காக கொள்ளையர்கள் வங்கிக்கு பக்கத்து கடையை கடந்த மே மாதமே வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள்.

இதற்காக கடந்த ஐந்து மாதமா திட்டமிட்டுள்ளனர். மேலும் சி.சி.டிவி கேமராவில் பதிவாகாத படி அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர்மேலும் அந்த வங்கிக்கு தினமும் சென்று அங்கு இருக்கும் இடங்களையும், இரவில் செக்யூரிட்டி தூங்கும் நேரத்தையும் கண்டுபிடித்து இருக்கின்றனர்தற்போது பக்கத்து கடையை வாடகைக்கு விட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்இந்த கொள்ளையில் நான்கில் இருந்து ஐந்து நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம். இதில் மொத்தம் 40 லட்சம் மதிப்பிலான நகைகளும், வைரங்களும் கொள்ளை போய் உள்ளது. 225 லாக்கரில் முப்பது மட்டுமே கொள்ளை அடிக்கப்பட்டு  இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here