Home இந்தியா தீவிரவாதி சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்

தீவிரவாதி சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்

18
0
SHARE

ஜம்மு, நவ. 15& ஜம்மு காஷ்மீரின் குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்இந்தச் சண்டையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை தரப்பில் கூறும்போது, ”குல்காம் மாவட்டத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதலில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.