Home சினிமா ஐஸ்வர்யாராய் விவகாரம்: அபிஷேக் பச்சன் பாய்ச்சல்

ஐஸ்வர்யாராய் விவகாரம்: அபிஷேக் பச்சன் பாய்ச்சல்

27
0
SHARE

சமீபத்தில் மும்பையில் பிரபல டிசைனர் ஒருவரின் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பங்கேற்க ஐஸ்வர்யாராயை அழைத்துக்கொண்டு காரில் வந்தார் கணவர் அபிஷேக் பச்சன். ஐஸ்வர்யாராய் வருவதை கண்டவுடன் புகைப்பட கலைஞர்கள் வேகமாக ஓடி வந்து அவர் இறங்கும் போது கால்களை மட்டும் படம் பிடிக்க தயாராக இருந்தனர். அதைக்கண்டு ஐஸ்வர்யாராய் தயக்கத்துடன் காரிலேயே அமர்ந்திருந்தார். அவரது தர்மசங்கடத்தை புரிந்துகொண்ட அபிஷேக்பச்சன் கோபம் அடைந்தார்.

கார் அருகே காத்திருந்த புகைப்பட கலைஞர்களை அழைத்து, ‘நீங்கள் இதுபோல் செய்வது சரியில்லை. ஐஸ்வர்யாராயின் அழகு கால்களை படமெடுக்க காத்திருக்கிறீர்களா. அது தவறு. விருப்பமில்லாத இதுபோன்ற படங்களை எடுக்காதீர்கள். அப்படி ஏதாவது எடுத்திருந்தால் உடனே டெலிட் செய்துவிடுங்கள்என்று பாய்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.