Home சினிமா தியேட்டருக்கு நயன் விசிட்

தியேட்டருக்கு நயன் விசிட்

16
0
SHARE

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம்அறம்‘. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘அறம்படத்தில் நடித்ததிற்காக நயன்தாராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இப்படத்தை மேலும் பிரபலமாக்க முதல் முறையாக, ‘அறம்திரையிடப்பட்டுள்ள சென்னை திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று வருகிறார் நயன்தாரா. வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு காசி திரையரங்கம் மற்றும் உதயம் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்தவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

காசி திரையரங்கிற்கு வந்த நயன்தாராவை படக்குழுவினர் வரவேற்றனர். சுமார் 10 நிமிடங்கள் வரை அங்கு படம் பார்த்தவர்கள் மத்தியில் இருந்தார். பிறகு அங்கிருந்து கிளம்பி உதயம் உள்ளிட்ட திரையரங்குகளுக்கு சென்றார். முதன் முறையாக தன் படத்தை விளம்பரப்படுத்தும் முடிவில் நயன்தாரா களமிறங்கியிருப்பது தயாரிப்பாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here