Home விளையாட்டு தோனிக்கு பதில் மாற்று வீரர் யார்?கபில்தேவ் நெத்தியடி கேள்வி

தோனிக்கு பதில் மாற்று வீரர் யார்?கபில்தேவ் நெத்தியடி கேள்வி

16
0
SHARE

புதுடெல்லி, நவ.14&

தோனியை நீக்கி விட்டால், அவருக்கு பதில் மாற்று வீரர் யார்? என்று கபில்தேவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் புகழை பெற்று தந்த, வெற்றிகர கேப்டன் மகேந்திர சிங் தோனி. கபில்தேவ் தலைமைக்கு பிறகு, தோனியின் தலைமையில் தான் உலக கோப்பையை வென்றோம்.

இந்த நிலையில் தோனி, 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என வி.வி.எஸ். லெட்சுமணன், அஜித் அகர்கர் உள்ளிட்ட வீரர்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.இதுபோன்ற விமர்சனங்களுக்கு எதிரான கேப்டன் விராத் கோலி தனது கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்து உள்ளார். மகேந்திர சிங் தோனியும் இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார்.இந்த நிலையில் தோனிக்கு ஆதரவாக கபில்தேவ் ஆதரவு அளித்து கருத்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி உள்ளதாவது:&

ஒரு சில ஆட்டத்தை வைத்து தோனியை விமர்சிப்பது ஏன்.? இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயது ஒரு பெரிய வி?ஷயம் இல்லை. திறமைதான் முக்கியம்.

2011&ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தெண்டுல்கர் ஆடிய போது அவரது வயது 38. அப்போது தெண்டுல்கரை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போது தோனியின் ஓய்வு குறித்து மட்டுமே பேசப்படுகிறது.

தோனியை அணியில் இருந்து நீக்க சொல்கிறார்கள். அப்படி செய்தால் அவருக்கு சரியான மாற்று வீரராக யாரை சேர்ப்பீர்கள். தோனியின் திறமை இந்திய அணிக்கு முக்கியம்.

ஹர்த்திக் பாண்டியாவிடம் திறமை இருக்கிறது. அவர் என்னைவிட சிறந்த ஆல்ரவுண்டராக வருவார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர வேண்டும்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here