Home சுடச்சுட ‘காதல் கசிய கசிய பேசி ஏமாற்றி விட்டார்’ரொனால்டோ மீது பெண் பகீர்

‘காதல் கசிய கசிய பேசி ஏமாற்றி விட்டார்’ரொனால்டோ மீது பெண் பகீர்

16
0
SHARE

லிஸ்பென், நவ.14&

காதல் கசிய கசிய பேசி, ரொனால்டோ தன்னை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் பகிரங்க புகார் தெரிவித்து உள்ளார்.

ரியாலிட்டி தொலைக்காட்சி பிரபலம் நடாஷா ரோட்ரிக்ஸ். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர். இவர் பிரபல கால்பந்து ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னுடன் சேர்ந்து கொண்டு அவரது பெண் தோழியான ஜியோர்ஜினாவை ஏமாற்றினார் என பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதுவும், ரொனால்டோ& ஜியோர்ஜினா தம்பதிகளின் 4&வது குழந்தை பிறக்க சில மணி நேரங்களுக்கு முன்னர் இவ்வாறு நடந்ததாக அவர் குண்டை தூக்கி போட்டு உள்ளார். இதுகுறித்து நடாஷா கூறியதாவது:&

எனக்கு அவருக்கு பெண் தோழி இருப்பது தெரியும். இருப்பினும், எங்களுக்குள் ஒரு நல்ல புரிதலும், பிணைப்பும், நம்பிக்கையும் இருந்தது. ரொனால்டோ மிகவும் அன்புள்ள மனிதர்.

அவருடன் இருந்த காலம் அற்புதமானது. குறிப்பாக, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த இரவுகள் மறக்கமுடியாதவை. அதன்பிறகு, போர்ச்சுகீசின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க செல்வதாக நான் கூறியதற்கு, ‘போகக்கூடாதுஎன மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அதையும் மீறி அவரிடம் இருந்து வெளியே வர முயற்சித்தேன். ஆனால், என்னை தடுத்துவிட்டார். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில், வெறும் உடலுறவுக்காக மட்டுமே என்னை பயன்படுத்திக் கொண்டார் என்பது தெரிய வருகிறது.

இதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனெனில், அவருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் கனவு. அந்த கனவு நனவாகிவிட்டது. ஆனால், அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறேன்.

கடந்த 2015&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் இரவின் போது, விளையாட்டாக என்னை படம் பிடித்து அனுப்பினேன். அவர் அதனை விரும்ப மாட்டார் என்றே நினைத்தேன்.

ஆனால் அவர் பிடித்துள்ளது எனவும், தனிமையில் சந்தித்து காண விரும்புகிறேன் என்றும் பதில் அனுப்பினார். இதையடுத்து, அவரது குடியிருப்புக்கு நான் சென்றேன். ரொனால்டோ வீட்டிற்கு நான் செல்வதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எனது மனம் படபடத்தது.

ஆனால், எனது வீட்டில் இருப்பது போல சகஜமாக இருக்குமாறு ரொனால்டோ என்னிடம் அன்பாக கூறினார். அப்போதுதான் காதல் கசிய கசிய பேசி, என்னை வீழ்த்தி விட்டார். இதனை நான் குற்றமாக கூறவில்லை.

அவரை மிகவும் நேசிக்கிறேன். இதனால் இதை பெரிதாக்க விரும்பவில்லை. ஜியோர்ஜினாவிடமாவது அவர் உண்மையாக இருப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு நடாஷா தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here