Home இந்தியா ஏர் ஏசியா அதிரடி சலுகை

ஏர் ஏசியா அதிரடி சலுகை

19
0
SHARE

புதுடெல்லி, நவ.14&

இந்தியாவில் ஏர் ஏசியா நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் 12&ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் 19&ந் தேதி வரை பல சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை அறிவித்து உள்ளது.

2018&ம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஜனவரி வரை பயணம் செய்யும் டிக்கெட்கள் மட்டும் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும். பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், ராஞ்சி, புவனேஷவர், கொல்கத்தா, டெல்லி, கோவா மற்றும் பிற ஏர் ஏசியா சேவை உள்ள பிற வழித்தடங்களிலும் சலுகை விலையில் பயணம் செய்யலாம்.

கோலாலம்பூர் செல்ல திருச்சி, கொச்சி, டெல்லி, புவனேஷ்வர், ஜெய்ப்பூர் பயணம் செய்யவும், பாலி செல்ல மும்பை கொல்கத்தாவிலிருந்தும், பாங்காக் செல்ல ஜெப்பூர், கொல்கத்தா, கொச்சி, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்தும் விமான டிக்கெட்கள் சலுகை விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.