Home இந்தியா வாராக்கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை வங்கிகளில் மீண்டும் முதலீடுமத்திய அமைச்சர் அருண் ஜெட்லி...

வாராக்கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை வங்கிகளில் மீண்டும் முதலீடுமத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

12
0
SHARE

புதுடெல்லி, நவ.14&

வாராக்கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும், பொதுத்துறை வங்கிகளில் மீண்டும் முதலீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

வாராக்கடன்பிரச்சினையில்சிக்கிதவித்துவரும்பொதுத்துறைவங்கிகளில்ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடன் பத்திரங்கள், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு மற்றும் பங்குகளை விற்பது போன்றவற்றின் மூலம் இந்த மறு முதலீடு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளில் மீண்டும் முதலீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார். இதுதொடர்பாக பொதுத்துறை வங்கிகள் ஏற்பாடு செய்திருந்த `பி.எஸ்.பி மன்தன்நிகழ்ச்சியில் அருண் ஜெட்லி மேலும் கூறியதாவது:&

பொதுத்துறை வங்கிகளில் மீண்டும் அதிக முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு, கடன் பத்திரங்கள், பங்குகள் மூலம் இந்த முதலீடு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்மூலம் வங்கி அமைப்பு தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கும். வங்கிகளின் வர்த்தக பரிவர்த்தனைகளில் எந்தவொரு இடையூறும் இருக்காது. ஆனால் நிதியுதவி அளித்து வங்கிகளை வலுப்படுத்துவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2017&ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.7.33 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்தஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.51 ஆயிரம் கோடியை மத்திய அரசு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here