Home இந்தியா கவுரி லங்கேஷ் கொலை: குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைத்ததுஅமைச்சர் தகவல்

கவுரி லங்கேஷ் கொலை: குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைத்ததுஅமைச்சர் தகவல்

27
0
SHARE

பெங்களூரு, நவ.14&

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ் கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக போலீஸ்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டி நிருபர்களிடம் பேசுகையில், பெண் பத்திரிகையாளரை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள், விரைவில் பிடிபடுவார்கள்.

இருப்பினும், தற்போது, அவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க இயலாது.” என்றார். கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.