Home சுடச்சுட போலி சமதர்மவாதி ரூ.60 ஆயிரம் ஷ¨, ஹப்லாட் வாட்ச் அணியும் சித்தராமையாகுமாரசாமி குற்றச்சாட்டு

போலி சமதர்மவாதி ரூ.60 ஆயிரம் ஷ¨, ஹப்லாட் வாட்ச் அணியும் சித்தராமையாகுமாரசாமி குற்றச்சாட்டு

13
0
SHARE

பெங்களூரு, நவ.14&

கர்நாடக முதல்வர் சித்த ராமையா ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஷ¨ அணிந்து சொகுசு வாழ்க்கை நடத்துகிறார் என மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்த ராமையா உள்ளார். இவர் மீது ஏற்கனவே, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘ஹப்லாட்ரக வாட்ச் அணிந்து இருப்பதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

இருந்தாலும், சர்ச்சை நீடித்ததால், அந்த வாட்சை, அரசு கருவூலத்திடம் அளித்து விட்டு, அது மாநில சொத்து என அறிவிப்பும் வெளியிட்டார்.

இதன் பிறகு உள்ளூர் பத்திரிகைகளில், ‘சித்தராமையாவிடம், தலா ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு,’ ரோலக்ஸ்வாட்ச்கள், ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘ஹப்லாட்ரக வாட்ச்; மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள,’ ஆடிமார்ஸ் பிக்யூட்ரக வாட்ச்; ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘திஸாட்ரக வாட்ச், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ‘லூயிஸ் உயிட்டன்ரக, ‘¨’க்களை தான் அணிகிறார். அத்துடன், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ‘ஹெர்மஸ்ரக தோல் செருப்புகளும் அவரிடம் உள்ளனஎன, செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது குமாரசாமி, புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ”தான் ஒரு சோசியலிஸ்ட் என கூறி வரும் முதல்வர் சித்தராமையா, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள, ‘¨’க்களை அணிகிறார் என்று கூறி உள்ளார்.

மேலும் தன் வாழ்நாள் முழுவதும் சோசியலிச கொள்கைகள் குறித்து பேசி வருபவர் அவர், நிஜ வாழ்க்கையில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார் என்றும் குற்றம் சுமத்தி உள்ளார். எதிர்க்கட்சியை சேர்ந்த யாராக இருந்தாலும் அவரை, ‘போலிஎன முத்திரையிடுவதில் சித்தராமையா நிபுணர். ஆனால், அந்த வார்த்தை அவருக்கு தான் பொருந்தும்என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here