Home இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் குறைந்தனடி.ஜி.பி. ஷேஸ் பால்...

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் குறைந்தனடி.ஜி.பி. ஷேஸ் பால் வைத் தகவல்

11
0
SHARE

ஜம்மு, நவ.14&

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், காஷ்மீரில் 90 சதவீத கல்லெறி சம்பவங்கள் குறைந்து விட்டது என்று டி.ஜி.பி. ஷேஸ் பால் வைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:&

காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் தற்போது பாதியாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 40 முதல் 50 கல்வீச்சு சம்பவங்கள் நடக்கும். தற்போது வாரத்திற்கு ஒரு சம்பவம் நடப்பதே அரிதாகி விட்டது. இது மிகப் பெரிய முன்னேற்றமாகும். மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். கல்வீச்சு சம்பவங்கள் இந்த அளவிற்கு குறைந்ததற்கு தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனை மட்டும் காரணமல்ல.

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது, பயங்கரவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டது என பல்வேறு காரணிகள் தான் இதற்கு முக்கிய காரணம். அத்துடன், கல்வீச்சுக்களால் தங்களின் சொத்துக்கள் தான் சேதமடைகின்றன என்பதை மக்களும் நன்கு புரிந்து கொண்டு உள்ளனர். தற்போது காஷ்மீரின் சட்ட ஒழுங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது இங்கு வசிக்கும் மக்களை கேட்டால் நன்கு தெரியும். இந்த ஆண்டு மட்டும் 170 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 முதல் 5 பேர் பயங்கரவாத அமைப்புக்களின் முக்கிய தலைவர்கள் ஆவார்கள்.

இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனை ஆகும். ராணுவத்தினரின் தொடர் நடவடிக்கையால் பல பகுதிகளில் பயங்கரவாத நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, அமைதி திரும்பி உள்ளது. போலீஸ், ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் மிக சிறப்பான ஒழுங்கிணைந்த செயல்பாடே இதற்கு முக்கிய காரணம்.

இவ்வாறு ஷேஸ் பால் வைத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here