Home சுடச்சுட ஆந்திரா படகு விபத்து: பலி 19 ஆக உயர்வு முதல்வர் சந்திரபாபு நேரில் ஆய்வுபிரதமர்...

ஆந்திரா படகு விபத்து: பலி 19 ஆக உயர்வு முதல்வர் சந்திரபாபு நேரில் ஆய்வுபிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

11
0
SHARE

விஜயவாடா, நவ.14&

ஆந்திரா மாநிலம் படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

படகு விபத்து

ஆந்திர மாநிலம், விஜயவாடா கிருஷ்ணா நதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்ததில், பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

21 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ”இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்பதாகவும், மீட்புப் பணிகளை ஆந்திர அரசு விரைந்து செய்து வருவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆய்வு

முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று (திங்கள்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பவித்ர ஹாரத்தியை காண பவுர்ணமி கரை, பவானி கரையிலிருந்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

21 பேர் காயம்

இதையடுத்து பயணிகள், விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம், பெர்ரி எனும் இடத்திற்கு சென்றனர். அப்போது சிறிது தூரம் சென்றவுடன் 45 பயணிகளை ஏற்றிச்சென்ற விசைப்படகு நதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்ததும் உடனடியாக போலீஸார், மீனவர்கள், உள்ளூர்

வாசிகள், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஞாயிற்றுகிழமை இரவு வரை 16 சடலங்கள் மீட்கப்பட்டன. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது.

இதில் இன்று காலை மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.8 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதில் சந்திரண்ணா காப்பீடு திட்ட உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

மகள் உடலை பார்த்த தாய் மரணம்

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதில், ஓங்கோலை சேர்ந்த லீலாவதி என்பவரின் சடலத்தை பார்த்து அவரது தாயார் லட்சுமி காந்தம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால் இவர்களது வீட்டில் சோகம் இரட்டிப்பானது.இந்த படகு விபத்து பலரது குடும்பங்களை புரட்டி போட்டுள்ளது. கணவன், மனைவி, தாய், தந்தையை இழந்த பலர் மருத்துவமனை முன் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here