Home தமிழகம் அருந்ததியர் கிராமங்களுக்கு மின் வசதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

அருந்ததியர் கிராமங்களுக்கு மின் வசதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

8
0
SHARE

திருத்தணி, நவ. 14&

திருத்தணி வட்டத்தில் அருந்ததியர் வசிக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.                      

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10&வது  வட்ட மாநாடு திருத்தணியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கே.எஸ். சம்மந்தம், ஆர்.பொற்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர். வட்ட குழு உறுப்பினர் வி.அந்தோணி வரவேற்றார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்..மோகனா துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் ஏ.அப்சல் அகமது அறிக்கையை வாசித்தார்.  கூட்டத்தில் திருத்தணி, பூனிமாங்காடு, பீரகுப்பம், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவேண்டும், விசைத்தறி தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் திருத்தணியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், திருத்தணி அரசு கலைக் கல்லூரிக்கு செல்ல பெண்களுக்கு என தனியாக பேருந்து இயக்க வேண்டும்.

செருக்கனூர், மேதினிபுரம், டி.புதூரில் அருந்ததியர் மக்கள் வாழும் கிராமங்களும் மின் இணைப்பு வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here