Home சம்பவம் குடும்ப அட்டை கோரிகுடும்பத்துடன் தர்ணா போராட்டம்

குடும்ப அட்டை கோரிகுடும்பத்துடன் தர்ணா போராட்டம்

14
0
SHARE

காஞ்சிபுரம், நவ. 14&

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். கூலித் தொழிலாளி. வறுமையில் வாடிய இவர் குடும்ப அட்டை கேட்டு மனு விண்ணப்பித்துள்ளார்.

மனுவிண்ணப்பித்துநீண்டநாட்களாகியும், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனுக்களை வழங்கியுள்ளார். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ராஜேஷ், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வந்து குடும்ப அட்டை கேட்டு கையில் பதாகையுடன்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here