Home சுடச்சுட ஜெயா டி.வி., மிடாஸ் ஆலையில் நடந்த சோதனை நிறைவு திவாகரன்உட்பட 300 பேருக்கு...

ஜெயா டி.வி., மிடாஸ் ஆலையில் நடந்த சோதனை நிறைவு திவாகரன்உட்பட 300 பேருக்கு சம்மன் புகழேந்தி, பூங்குன்றன் நேரில் ஆஜர்

13
0
SHARE

சென்னை, நவ. 14& சென்னையில் ஜெயா டி.வி., மிடாஸ் ஆலையில் நடந்த மெகா சோதனை நிறைவுக்கு வந்துள்ளது. மேலும் சம்மனுக்கு ஆஜராகி, நுங்கம்பாக்கம், வருமான துறை அலுவலகத்தில், தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். திவாகரன் உட்பட 300 பேருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 10ம் தேதி அன்று, 147 இடங்களில், சசிகலா உறவினர்கள் விடுகள், கம்பெனிகள், சினிமா நிறுவனம் உள்ளிட்டவைகளை வருமான வரித்துறையினர் மெகா சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சசிகலா ஆரம்பித்த போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கருப்பு பணத்தை, வெள்ளையாக்க, இந்த நிறுவனங்களை தொடங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 300க்கும் மேற்பட்ட வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில், விவேக் மற்றும் கிருஷ்ணபிரியா வீடுகளில், கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர் சட்ட விரோதமாக குவித்த சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த மெகா சோதனை நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது.

இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா ஆகியோர் வீடுகளிலும், ஜெயா டி.வி., மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களிலும் நேற்று 5&வது நாளாக சோதனை நடைபெற்றது. அந்த சோதனை நிறைவடைந்து விட்டதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று, சென்னை உட்பட மொத்தம் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நேரில் விளக்கும் அளிக்குமாறு, 300 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா, ஜெயா டி.வி., மிடாஸ் மதுபானஆலை ஆகிய இடங்களில் இன்றும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. ஜெயலலிதாவின் குடும்ப வைத்தியரும், டிடிவி தினகரனின் சகளையுமான டாக்டர் சிவக்குமார் வீட்டிலும் நேற்று 5வது நாளாக சோதனை நடந்தது.

187 இடங்களில் நடந்த சோதனையில் எங்கெங்கே நகை, பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தொகுத்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.  சோதனை முடிவடைந்ததும் இந்த விவரங்களை மேல் அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அளிக்க உள்ளனர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்டு வந்த வருமான வரி சோதனை நேற்று  பிற்பகல் 3 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையின்  போது கைப்பற்ற ஆவணங்களை 3 கார்களில் ஏற்றி, அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

கடந்த 4 நாட்களாக பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை அடுத்து, சசிகலாவின் சகோதரர் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் அடுத்த 2 நாட்களில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராவார் என கூறப்படுகிறது. வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதால் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில், திவாகரனுக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, சென்னையில் வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். 2 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு அவர் வெளியே வந்தார். பின்னர்,  புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். மீண்டும் நாளை விசாரணைக்கு வர சொல்லி இருக்கின்றனர். என்னிடம் கைப்பற்ற எந்த பொருளும் இல்லை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here