Home சுடச்சுட சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

35
0
SHARE

சென்னை,நவ.14& அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வடகடலோர மாவட்டகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆயுவு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:

கடந்த நவம்பர் மாதம் 10 தேதி தெம்ன்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுபெற்று தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 2 நாட்களுக்கு வடதிசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் படிபடியாக மழை குறையும். இதனால் அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.கனமழையை பொறுத்தவரை சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதுசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில நேரங்களில் மழை பெய்யும் சில நேரங்களில் சற்று பலத்த மழையாக இருக்கக்கூடும்.கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 11 செ.மீ மழையும்.பொன்னேரி, மாதவரம், நுங்கம்பாக்கம் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதுஇவ்வாறு அவர் தெரிவித்தார்.