Home இந்தியா உற்சாகமாக நேற்று துவங்கியது பெங்களூருவில் கடலை திருவிழா

உற்சாகமாக நேற்று துவங்கியது பெங்களூருவில் கடலை திருவிழா

14
0
SHARE

பெங்களூரு, நவ. 14& பெங்களூருவில் கடலைக் காய் திருவிழா நேற்று தொடங்கியது.

பெங்களூரு பசவனகுடி பகுதி கிராமமாக இருந்தபோது கெம்பேகவுடா ஆட்சி காலத்தில் அதிகமாக கடலைக்காய் விளைச்சல் செய்யப்பட்டது. ஆனால் இரவு நேரங்களில் அந்த கடலைக்காய் பறிக்கப்பட்டு சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் நடந்தன.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் கடலைக்காயை சேதப்படுத்துபவர்கள் யார்.? என்பதை கண்டுபிடிக்க, விவசாயிகள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்தபடி கண்காணித்தனர்.

அப்போது நள்ளிரவில் ஒரு பெரிய காளை மாடு வந்து கடலைக்காய் செடிகளை தின்றதை விவசாயிகள் பார்த்தனர். இதையடுத்து அந்த காளையிடம், அப்பகுதி விவசாயிகள் ஒரு வேண்டுதலை முன்வைத்தனர். தாங்கள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் இந்த கடலைக்காயை சேதப்படுத்த வேண்டாம் என்றும், தாங்களே உங்களுக்கு (காளை) சிலையை நிறுவி ஆண்டுதோறும் கடலைக்காய் விளைச்சல் வந்தவுடன் முதல் வேலையாக பூஜை செய்து கடலைக்காயை படைத்து வழிபடுவதாக விவசாயிகள் வேண்டினர்.

இதற்காகவே பசவனகுடியில் ஒரு கோவிலை விவசாயிகள் கட்டினர். அது தொட்டபசவண்ண கோவில் என்று அழைக்கப்படுகிறது. அந்த கோவிலில் காளை மாடு சிலை நிறுவப்பட்டு உள்ள அதை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த சிறப்பு வாய்ந்த, கடலைக் காய் திருவிழா பெங்களூரு பசவனகுடியில் ஆண்டுதோறும், தொட்டபசவண்ண கோவிலில் கன்னட கார்த்திகை மாதத்தின் கடைசி வார திங்கட்கிழமை நாளில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் கடலைக்காய் திருவிழா நேற்று(திங்கட்கிழமை) தொடங்கியது. இது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க திருவிழா ஆகும்.

இதையட்டி பெங்களூரு பசவனகுடியில் தொட்டபசவண்ண கோவில் அமைந்துள்ள புல்டெம்பிள் ரோட்டில் இருபுறத்திலும் கடலைக்காய் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள தொட்டபசவண்ண கோவிலில் உள்ள காளை மாட்டிற்கு கடலைக்காய்கள் மூலம் பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் விற்பனை தொடங்கியது. இதனை பலரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here