Home இந்தியா திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க நடவடிக்கை

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க நடவடிக்கை

11
0
SHARE

திருமலை, நவ. 14& திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2வது

மலைப்பாதையில் மழைக்காலங்களில் அதிகளவு மண் சரிவு ஏற்படுகிறது. இதை தடுக்க தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மண் சரிவு அதிகமாக ஏற்படும் இடங்களில் ஐஐடி நிபுணர்கள், தேவஸ்தான பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், மலைமீது உள்ள மரங்களின் வேர்கள் பாறை இடுக்குகளில் வளர்ந்து மழைக்காலங்களில் பிளவு ஏற்பட்டு மண் சரிவு  ஏற்படுவதாக தெரிவித்தனர். இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் நிறுவன அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலைப்பாதையில் 5  இடங்களில் மண் சரிவிற்கான வாய்ப்பு இருப்பதாகவும், 20 இடங்களில் குறைந்த அளவிலான மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அந்த இடங்களில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து அதன் மீது சிமென்ட் மூலம் தடுப்பு சுவர் ஏற்படுத்த சுமார் ரூ.80 லட்சம் செலவாகும் என தெரிவித்தனர். இதுதொடர்பான அறிக்கையை அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here