Home அரசியல் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு சித்தராமையா ஆட்சி 3 மாதமே நீடிக்கும் எடியூரப்பா காட்டம்

கொலை சம்பவங்கள் அதிகரிப்பு சித்தராமையா ஆட்சி 3 மாதமே நீடிக்கும் எடியூரப்பா காட்டம்

35
0
SHARE

பெங்களூரு, நவ. 14& கர்நாடகத்தில் சித்த ராமையா ஆட்சி இன்னும் 3 மாதமே நீடிக்கும் என்று எதிர்கட்சி தலைவர் பி.எஸ். எடியூரப்பா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:&

ஏழை& எளிய மக்களுக்காக ஆட்சி நடத்தி வருவதாக சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மட்டும், பள்ளி குழந்தைகளுக்கு தரமற்ற சீருடைகளை வழங்கி ரூ.75 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்& ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அது செயல்படாமல் உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில், கொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இந்து அமைப்பினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி செய்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் மணல் கொள்ளை அடிப்பதால், மாநில மக்கள் வீடு கட்ட மணல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். போதை பொருள் மாபியாக்களை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. சித்தராமையா தலைமையிலான ஆட்சி இன்னும் 3 மாதங்களே நீடிக்கும். அதன்பிறகு அவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.