Home சம்பவம் மெட்ரோ ரயில் பணியால் ரிப்பன் மாளிகை சேதம்

மெட்ரோ ரயில் பணியால் ரிப்பன் மாளிகை சேதம்

21
0
SHARE

சென்னை, நவ. 14& சென்னை பெரியமேடு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பது காரணமாக சென்னை பெருநகர மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையில் உள்ள மணிக்குகூண்டில் சில நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது.

தற்போது ரிப்பன் மாளிகை அருகே பணிகள் நடைபெறுவதால் அந்த விரிசல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் ரிப்பன் மாளிகையை பார்வையிட்டனர். இந்த விரிசகளை சரி செய்ய குஜராத்தில் இருந்து 14&ந்தேதி பணியாளர்கள் வர இருப்பதாகவும், ரூ.54 லட்சம் செலவில் 2 மாதங்களில் சீரமைக்கும் பணிகள் முடிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.