Home தமிழகம் வந்தே மாதரம் பாடல் விவகாரம் பள்ளிகளில் இந்தப் பாடலை பயன்படுத்தக் கூடாது கீ.வீரமணி வலியுறுத்தல்

வந்தே மாதரம் பாடல் விவகாரம் பள்ளிகளில் இந்தப் பாடலை பயன்படுத்தக் கூடாது கீ.வீரமணி வலியுறுத்தல்

31
0
SHARE

சென்னை, நவ. 14&  வந்தே மாதரம் எனும் பாடலைப் பள்ளிகளில் பயன்படுத்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ள கருத்து மதச் சார்பின்மைக்கு விரோதமானது, முஸ்லிம்களைப் பன்றிகள் என்று சிறுமைப்படுத்தும் நாவலில் இடம் பெற்ற இந்தப் பாடலை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பள்ளிகளில் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர்,வழக்குக்கு அப்பிரச்சினை நேரடியான சம்பந்தம் உடையதல்லாததாக இருந்தபோதிலும் தீர்ப்பு வழங்கினார்.

இதன்மீது மேல் முறையீடு சென்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இது அரசின் கொள்கை முடிவாக தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினை எனவே தமிழக அரசின் முடிவுக்கே இதனை விட்டு விடுகிறோம் அரசு முடிவு எடுக்கட்டும் என்பதாகத் தீர்ப்பு வழங்கினர். இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். தமிழக அரசும் இதுபற்றி ஆழமாகப் பரிசீலித்தது, இருப்பதை அப்படியே பள்ளிகள் முறையாக இருக்க முடிவு எடுப்பது அ.தி.மு.க. ஆட்சிக்கு உகந்ததாக,தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்காததாகவும் அமையும்.

வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனப் புதின ஆசிரியர் எழுதிய  ஆனந்தமடம் எனும் (1882ல்) புதினத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்சினையை மய்யப்படுத்தி எழுதியுள்ளார். அதில்தான் இந்த வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றதை பிறகு இந்துத்துவா பார்வையுடன், பின்னணியில் தேசியத்தார்களான அக்கால காங்கிரசினர் இதை ஒரு கோஷமாகவே பயன்படுத்தத் தொடங்கினர். பள்ளிகளில் பாட வேண்டும் என்றால் மதம் சார்ந்த பிள்ளைகளும் (இஸ்லாமியர் உட்பட), மதம் சாராதவர்களின் பிள்ளைகளும் படிக்கும் பள்ளிகளில்,சமூக நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் இப்பாடலைப் பாடுவது தேவையேயில்லை.

வீண் கலவரங்களுக்கும், குழப்பத்திற்கும் தான் இது இடம் அளிக்கும்.தமிழக முதல் அமைச்சரும், அரசும் இதில் விழிப்போடு இருக்க வேண்டும்.எந்தவித நிர்ப்பந்தங்களுக்கு நெருக்கடிகளுக்கு ஆளாகி,தங்கள் ஆட்சியின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்ளக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.