Home அரசியல் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ம.க. மாஜி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ம.க. மாஜி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்

15
0
SHARE

 சென்னை, நவ.14& மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ.கலிவரதன் பா.ஜ.க.வில் இணைந்தார்.

வீ.ஏ.டி. கலிவரதன் 1980ல் முதல் முறையாக வன்னியர் சங்கத்தில் இணைந்து,  பின்னர் 1989 தொடங்கி பா.ம.க.வில் கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர், விழுப்புரம் மாவட்ட தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்து 2006 ம் ஆண்டு பா.ம.க. முகையூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வந்தார்.

மேலும் கடந்த 2012ம் ஆண்டு வரை பா.ம.க.வின் மாநில துணைத் தலைவர், மாநில துணை பொதுச் செயலாளர், மாநில விவசாய அணி தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்து வந்தவர். திருச்சியில் விழுப்புரம் மாவட்டம், முகையூர் தொகுதி பா.ம.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்   வீ.ஏ.டி. கலிவரதன்  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.

அப்போது பா.ம.க., தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர்  கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் தங்க ராஜையன், கோட்டப் பொறுப்பாளர் சிவ சுப்ரமணியன், அகோரம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here