Home சிறப்புச் செய்திகள் தேசிய குழந்தைகள் தினம்

தேசிய குழந்தைகள் தினம்

8
0
SHARE

நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14&ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகளைப் பெரிதும் நேசித்தவர். குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்புடன் அழைத்தார்கள். புதிய பாரதத்தை உருவாக்கும் எதிர்காலச் சிற்பிகளான குழந்தைகளின் எதிர்காலம் குறித்த தீவிரமான சிந்தனைகளை இன்றைய தினம் நம் மனத்தில் எழுப்புகிறது.குழந்தைகளின் கல்வியில் அரசும் மக்களும் பெரியதும் அக்கறை காட்ட வேண்டும்.குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியில் பெற்றோர்கள் மட்டுமல்ல அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டும்.

குழந்தைகளின் மன நலம் முக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.குழந்தைகள் உடல் வலு உள்ளவர்களாகவும் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். உயர் எண்ணங்கள் மலரும் சோலையாகக் குழந்தைகளின் உள்ளம் திகழ வேண்டும்.குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோர் சத்துள்ள உணவளிக்கத் தவறக்கூடாது.

குழந்தைகளுக்குத் தன் சுத்தம் குறித்து எடுத்துக் கூற வேண்டும். துவைத்து அழுக்கு நீக்கிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகளின் அன்பையும், பாசத்தையும், கண்டிப்பையும் காட்ட வேண்டும்.

அடித்து துன்புறுத்தவும் கூடாது. நீண்ட நாள் பிரிந்திருக்கவும் கூடாது. உங்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகும்போது மற்ற குழந்தைகளின் பழக்கங்கள், பண்பாடுகள், நடத்தைப் போக்குகள் போன்றவை பாதிக்கப்படும்.

பிற குழந்தையிடமிருந்து நம் குழந்தை நல்ல பண்புகளைக் கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் வேண்டாத பழக்கங்களைக் கற்றுக் கொள்ளும்போது விழிப்புடன் இருந்து குழந்தையைக் கண்டித்து வளர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அதிக செல்ல கொடுத்து அவர்களைச் சோம்பேறிகளாக ஆக்கி விடக்கூடாது. பெற்றோருக்கு உதவியாக அவர்கள் சின்னஞ்சிறு  வேலைகளைச் செய்வது தவறு இல்லை.

குழந்தைகள் தினம் பெரும்பாலும் பள்ளிகளில் தான் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு சிந்தனைகள் ஆசிரியர்களிடம் தான் அதிக அளவில் ஏற்பட வேண்டும்.ஒவ்வொரு குழந்தையும் உருவாக்குவதில் பள்ளி நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் கடுமையான தண்டனைகள் பற்றி செய்தியை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்கள் என்றாலும் கூட அத்தகைய துன்புறுத்தலில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது.

இந்த சிந்தனையை ஆசிரியர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.நாள் முழுவதும் கால் கடுக்க நிற்க வைப்பது. இருட்டறையில் அடைப்பது,நாள் முழுக்க கால் கடுக்க முட்டி இடச்சொல்வது, கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு அடிப்பது போன்ற கொடிய செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்ற சிந்தனை வரவேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தலில் ஆசிரியர்களின் அணுகு முறையில் ஆரோக்கியமான மாற்றம் வரவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here