Home சுடச்சுட விவேக் வீட்டில் 4&வது நாளாக சோதனை வெளிநாடுகளில் சசிகலா உறவினர்கள் பல ஆயிரம் கோடி...

விவேக் வீட்டில் 4&வது நாளாக சோதனை வெளிநாடுகளில் சசிகலா உறவினர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுஆவணங்கள் சிக்கின

49
0
SHARE

சென்னை, நவ. 13&

வருமான வரித்துறையினர் நடத்திய மெகா சோதனையில், சசிகலா உறவினர்கள், வெளி நாடுகளில், பல ஆயிரம் கோடி முதலீடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் 4 வது நாளாக சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 187 இடங்களில் சசிகலா உறவினர் வீடுகள், கம்பெனிகள், சினிமா தியேட்டர்கள், மிடாஸ் மதுபான ஆலை என வருமான வரித்துறையினர், கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீடு, தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீடு, ஈக்காட்டு தாங்கலில் உள்ள  ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம் என தொடர்ந்து சோதனை நடைபெற்றது வருகிறது. வேளச்சேரி ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது.

சசிகலா, கருப்பு பணத்தை வெள்ளையாக்க போலி நிறுவனங்களை தொடங்க உறுதுணையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பாஸ்கரன் வீட்டில், 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சசிகலா உறவினர்கள் வீடுகள், கம்பெனிகள் ஆகியவற்றில் சோதனை நடந்த போது, மலைக்கும் அளவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த 4 நாட்களில், வரிஏய்ப்பு, கருப்பு பணம் வெள்ளையாக்குதல், போலி நிறுவனங்கள் தொடங்கியதற்கான ஆதாரங்களுக்கான ஆவணங்கள் சிக்கின.

அந்த ஆவணங்களை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் வைத்து, ஆடிட்டர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், போலி நிறுவனங்கள் மூலம் வந்த பல ஆயிரம் கோடிக்கணக்கிலான பணத்தை, சசிகலா உறவினர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலி நிறுவனம் தொடங்கி கொடுத்த, அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மகாலிங்கபுரம் பகுதியில் விவேக் வீட்டில், வருமான வரித்துறையினர் , கடந்த 4 நாட்களாக சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில், விவேக்கின் மலைக்க வைக்கும் சொத்து கணக்குகள் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், ஐதராபாத் திராட்சை தோட்டத்தை, கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். அவரது மனைவி இளவரசி மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் இளவரசியை தன்னுடன் வந்து இருக்குமாறு, ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குள்  அனுமதித்தார்.

இதனால் அப்போது  சிறு கைக்குழந்தையாக இருந்த  விவேக் போயஸ் கார்டனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். ஆஸ்திரேலியாவில், பி.பி..வும், புனேவில் எம்.பி.. படித்துவிட்டு கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஐ.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றினார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்ட போது மருந்து, மாத்திரைகளை எடுத்துவருவதற்கு, நம்பத்தகுந்த ஆளாக விவேக் இருந்தார். 2015ம் ஆண்டு வேளச்சேரி,  பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ்நிறுவனத்தை  விவேக் எடுத்து நடத்தினார்.  அந்த தியேட்டர்களை, சுமார், ஆயிரம் கோடி ரூபாய்க்கு விவேக்வாங்கியிருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

தியேட்டர்களை விலை கொடுத்து வாங்கவில்லை, குத்தகைக்கு மட்டுமே எடுத்துள்ளதாக அப்போது, விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போன்று திரைப்பட  விநியோகத்தில் பணவர்த்தனை ஜாஸ் சினிமாஸ் மட்டுமல்லாது, 136 தியேட்டர்களும்,  விவேக் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது, விவேக்கின் தியேட்டர்கள், மூலம்  கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பினாமிகள் பலரது பெயரில், விவேக் சொத்து வாங்கி குவித்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

மத்திய கம்பெனி விவகாரத்துறை சந்தேகிக்கும் போலி நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதன் பேரிலேயே, கிருஷ்ணப்ரியா, விவேக் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர், கடந்த 4 நாட்களாக சல்லடை போட்டு சலித்து வருகின்றனர். சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளின் ஆவணங்கள், போலிநிறுவனங்களில்

ரூ. 150 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளிட்டவை விவேக்கின் வீட்டிலேயே சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.