Home சுடச்சுட எந்த சக்தியாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது100 ஆண்டு ஆட்சி தொடர வேண்டும்நெல்லையில் முதல்வர் பேச்சு

எந்த சக்தியாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது100 ஆண்டு ஆட்சி தொடர வேண்டும்நெல்லையில் முதல்வர் பேச்சு

28
0
SHARE

மக்கள் பலம் இருக்கும் வரை எந்த சக்தியாலும் அ.தி.மு..வை அழிக்க முடியாது என்றும், 100 ஆண்டுகள் ஆட்சி தொடர அனைத்து தொண்டர்களும் பாடுபட வேண்டும் என்றும் நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சென்னை, நவ.13&

திருநெல்வேலியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நலத்திட்டங்களை வழங்கியும், திருநெல்வேலிக்கான சுற்றுலா செல்போன் அப்ளிகேஷனை துவக்கி வைத்தும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

எழில் கொஞ்சும் மாவட்டம்

தென் பாண்டி நகர் என்ற திருப்பெயரைப் பெற்று பாண்டிய நாட்டின் பழம்பெருமை மிக்க பகுதியாக விளங்கும் இந்த திருநெல்வேலி சீமை தமிழும், தெய்வீகமும் மணக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அறிவு மாவட்டமாகும். இறையனார் அகப்பொருள், திருவிளையாடற் புராணம், மதுரைக் காஞ்சி, குற்றாலக் குறவஞ்சி போன்ற  சங்க இலக்கியங்களும், ராபர்ட் கால்டுவெல் என்ற ஆங்கிலேய கிறிஸ்துவ பாதிரியாரின்  திருநெல்வேலிச் சீமை வரலாறு என்ற ஆராய்ச்சி நூலும், ரோமாபுரி நாணயங்களும் திருநெல்வேலியின் பழமையை பறைசாற்றுகின்றன.

எம்.ஜி.ஆருக்கும்  தமிழ்நாட்டின் ஒளிவிளக்காகத் தோன்றிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மிகவும் பிடித்த மாவட்டம் இந்த திருநெல்வேலி மாவட்டமாகும். .தி.மு..வின் இருபெரும் தலைவர்களின்  கலைவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தொடர்புடையது இந்த நெல்லை மாவட்டம். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

ஸ்தம்பித்த நகரம்

எம்.ஜி.ஆர். .தி.மு..வை தொடங்கியதிலிருந்து இந்த நெல்லை மாவட்ட மக்கள் அவருக்கு பேராதரவு தந்து உள்ளனர். .தி.மு.. சார்பில் எம்.ஜி.ஆர். இங்கே யாரை சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள் என்பதை  .தி.மு.. எதிர்கொண்ட பல சட்டசபை தேர்தல்களில்  நிரூபித்து காட்டியவர்கள் இந்த மாவட்ட மக்கள்.

1968ம் ஆண்டு இதே திருநெல்வேலி பாளையங்கோட்டையில் எம்.ஜி.ஆர். தலைமையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு மாபெரும் நடன நிகழ்ச்சியை நடத்தினார். திருநெல்வேலி நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மக்கள் திரளாக கூடியிருந்தனர். நடன நிகழ்ச்சியின் நிறைவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வாழ்த்தி பேசும் போது, அவரின்  பெயரை குறிப்பிட்டு, அற்புதமான நடனக் கலைஞர், அழகாகப் பாடவும் கூடியவர் என்பதை அடிமைப்பெண்  படம் நிரூபித்தது. நடிப்பில், நடனத்தில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளைப் பற்றியும்,  எல்லாமும் அறிந்தவர் என்று சொல்லி குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில்

காலத்தால் எத்தனையோ நடிகர்களும், தலைவர்களும் மக்களால் மறக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் இருக்கும்போது எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டு காலம் ஆகியும் மக்களோடு மக்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், மக்கள் உதடுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும்  ஒரே தலைவர். திருநெல்வேலி மண்ணில்தான் 1968 ம் ஆண்டு, எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பொதுவாழ்க்கைக்கு அழைப்பு விடுத்தார். வரலாற்றில் பதிவாகி உள்ள இந்த இரண்டு சம்பவங்களிலும் திருநெல்வேலி மக்களாகிய உங்களுக்கு பங்கு இருக்கிறது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஏற்படுத்தியிருக்கிற பாதையில்தான் இப்போதும் அ.தி.மு.. பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளில் இருந்து சிறிதும் பிறழாமல்,அவர்கள் விருப்பத்தையே வாக்குறுதியாக ஏற்று நாங்கள் பல்வேறு கடமைகளை ஆற்றி வருகின்றோம். எங்களை,  நாங்கள் தலைவர்களாக  ஒரு காலமும் நினைத்துக் கொண்டதில்லை.  தொண்டர்களாகவே நினைத்துத்தான்  அல்லும் பகலும் மக்கள் பணியாற்றி வருகிறோம்.

நூறாண்டு ஆட்சி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சூளுரையான, .தி.மு.. ஆட்சி நூறாண்டுகள் தொடர பாடுபட வேண்டும். இந்த கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. எம்.ஜி.ஆரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் மக்களுக்கு வழங்கிய திட்டங்களால் ஏற்பட்ட பயன்களைப் பற்றி விளக்கமாக  மக்களிடம் எடுத்துக் கூறுவோம். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை தொடங்கிய திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதில் அரசு அலுவலர்களுக்கு உற்ற தோழர்களாக இருந்து உதவி செய்யும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் மூலம்   எத்தனை மகத்தான திட்டங்கள் மக்களுக்காக துவக்கப்பட்டுள்ளன. எத்தனைபுதியதிட்டங்களுக்குஅறிவிப்புகள்வெளிவந்திருக்கின்றன

என்பதை மக்கள் அறிவர். அதுதான் நமக்கு பலம். மக்கள் பலம் இருக்கும் வரை எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.  எம்.ஜி.ஆருக்கு எடுக்கின்ற நூற்றாண்டு விழா. இந்த விழாவிற்கு வந்திருக்கின்ற மகளிர், குழந்தைகள் பத்திரமாக வீடுபோய் சேர வேண்டும். தொண்டர்களும் பொது மக்களும் வாகனத்தில் போகிறபோதும், நடந்து போகிற போதும் கவனமாக வீடுபோய் சேரவேண்டும் என தெரிவித்தார்

இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்,  மக்களவை துணைத்தலைவர்  தம்பிதுரை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.