Home தமிழகம் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்வானிலை ஆய்வு மையம் தகவல்

11
0
SHARE

சென்னை,நவ.13&

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்கியது. பருவ மழை தொடங்கிய சில நாட்களிலே கன மழையாக கொட்டி தீர்த்தது. குறிப்பாக தமிழத்தின் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழையால் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கபட்டதுடன் மழைநீர் வடிய ஒரு வாரத்திற்கும் மேலாக ஆனது. குறிப்பாக கனமழையால் தி.மு.. தலைவர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த அளவிற்கு கனமழை ஓரிரு நாட்களிலே கொட்டித்தீர்த்தது.

அதேபோன்று டெல்டா பகுதிகளிலும் கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாடகளுக்கு முன்பு வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகி தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் கடந்த இரண்டு நாடகளாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலவி வருகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here