Home சம்பவம் சிட்லபாக்கத்தில் திடீரென தீப்பிடித்த கார்

சிட்லபாக்கத்தில் திடீரென தீப்பிடித்த கார்

26
0
SHARE

தாம்பரம், நவ. 13&

சென்னை அடுத்த சிட்லபாக்கம் 2 வது பிரதனசாலையில் உள்ள சிட்லபாக்கம் காவல் நிலையம் அருகில் நேற்று மதியம் கார் ஒன்று திடீர் என தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். அனால் அதற்குள் காரில் இருந்த தீ அருகில் நின்று கொண்டிருந்த மினி வேன் மீது பரவி மினி வேன்னும் தீப்பற்றி எரியத்தொடங்கியது.

சில மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் கார் முற்றிலும் எரிந்தும் மினி வேன் சிறிதளவு எறிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த கார் சிட்லபாக்கம் போலீசாரால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு சம்மந்தமாக கைப்பற்றப்பட்டு சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது.

மேலும் முன்னாள் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் தற்போது வேறு காவல்நிலையாயத்திற்கு மாற்றப்பட்டதாலும், வாகனத்தின் ஆவணங்களை போலீசார் தவறவிட்டு இருக்க வாய்ப்புள்ளதாலும் அது வழக்கு சம்மந்தப்பட்ட கார் இல்லை என சிட்லபாக்கம் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.