Home அரசியல் கமல் கட்சி தொடங்கும் விவகாரம் : நடிகர்கள் கட்சித் தலைவராவது நாட்டுக்கு மிகப்...

கமல் கட்சி தொடங்கும் விவகாரம் : நடிகர்கள் கட்சித் தலைவராவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி பேட்டி

13
0
SHARE

பெங்களூரு, நவ. 13&

நடிகர் கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரப்போவதில்லை என்று தெரிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர்கள் தலைவராவதால் நாட்டுக்கு மிகப் பெரும் பேரழிவு என்று விமர்சனம் செய்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:

திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர்கள் (திரைப்பட நடிகர்கள்) கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது.

கமல்ஹாசன் தொடங்கும் கட்சி உள்பட எந்த அரசியல் கட்சியிலும் ஒருபோதும் நான் சேரப்போவதில்லை என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் விவசாயிகள் பிரச்னை, பெங்களூர் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு, தாஜ்மகால் புராதன சின்னங்களிலிருந்து நீக்கம், தற்போதைய அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிரடியாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், உயர்பணமதிப்பிழப்பு நீக்கம்செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றதையட்டி கடந்த 8ஆம் தேதி தனது டுவிட்டர் பக்க பதிவில், நமதுகாலத்தின் மிகப்பெரிய தவறுக்காக, அதை செய்தவர்கள் (பிரதமர் நரேந்திர மோடி) மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்களா? என பதிவிட்டிருந்தார்.

ஜெயலலிதாவின்மறைவுக்குப்பிறகுதமிழகத்தில்நடைபெற்றுவரும்அரசியல்மற்றும்அரசின்செயல்பாடுகளால்தமிழகமக்கள்மனமாற்றம்அடைந்துள்ளதால், தமிழகத்தில் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

இவர்களின்இந்தமுடிவுக்குபெரும்பாலானநடிகர்கள்வரவேற்புஅளித்துள்ளநிலையில், நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருப்பது கமல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here