Home உலகம் யுனெஸ்கோவிற்கு தலைவர் நியமனம்

யுனெஸ்கோவிற்கு தலைவர் நியமனம்

17
0
SHARE

நியுயார்க், நவ.13&

யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) 11வது தலைவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சார துறை மந்திரி ஆட்ரி அசூலே நியமிக்கப்பட்டுள்ளார்.

.நா சபையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் யுனெஸ்கோ அமைப்பின் தற்போதைய தலைவர் இரினா போவாகோவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து யுனெஸ்கோ தலைவராக அசூலே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இவர், நாளை மறுதினம் (15&ந் தேதி) தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 2016&17 வரை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரதுறை மந்திரியாக பதவி வகித்த அசூலே, யுனெஸ்கோவின் தலைமை பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.