Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

14
0
SHARE

* சவுதி தலைநகர் ரியாத்தில் பதவி விலகலை, அறிவித்த தங்கள் நாட்டு பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு சவுதி அரேபியாவிடம் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

* கடந்த மாதம் வரை ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கின் ஹவிஜா நகரத்தின் அருகில், குறைந்தது 400 சடலங்களை கொண்ட ஒரு புதைகுழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு பெயரிடப்படாத சரக்கு ராக்கெட் கிளம்பத் தயாரானபோது, தடைசெய்யப்பட்ட விமான பாதையில் ஒரு சிறிய விமானம் பறந்ததால் ராக்கெட் ஏவுதல் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

* ஜெர்மனியில் அரியவகை தோல் நோயால் அவதிப்பட்ட 7 வயது சிறுவன் மரபணு சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள சம்பவம் மருத்துவ துறையில் சாதனையாக கருதப்படுகிறது.

* பாகிஸ்தானில் 23 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை உருவாக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here