Home உலகம் இருதரப்பு உறவு, பயங்கரவாத தடுப்பு குறித்து பேச்சு பிரதமர் மோடி, டிரம்ப் சந்திப்பு ...

இருதரப்பு உறவு, பயங்கரவாத தடுப்பு குறித்து பேச்சு பிரதமர் மோடி, டிரம்ப் சந்திப்பு பிலிப்பைன்சில் இன்று நடக்கிறது

14
0
SHARE

மணிலா, நவ.13&

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு பிலிப்பைன்சில் இன்று நடக்க உள்ளது.

50&வதுஆசியான்மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அதற்காக அவர் நேற்று பிலிப்பைன்ஸ் சென்றார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷ¨யாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அதில் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்கிடையே மாநாட்டின் இடை வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

அப்போது இருநாட்டு தலைவர்களும் சர்வதேச நிலவரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

மேலும் ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சீன பிரதமர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட்டையும் சந்திக் கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் டிரம்ப்&மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றார். அதையடுத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்தித்தார்.

தற்போது 2வது முறையாக டிரம்பை சந்திக்கிறார். தென்சீனக் கடல் தொடர்பாக தற்போது சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சீன பிரதமர் பிலிப்பைன்ஸ் வருவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here