Home உலகம் வங்கதேச சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராஜினாமா

வங்கதேச சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராஜினாமா

15
0
SHARE

டாக்கா, நவ.13&

வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்கா. இவர்தான், வங்கதேசத்தின் முதல் இந்து தலைமை நீதிபதி ஆவார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளைத் தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து நீதிபதி சுரேந்திரகுமார் சின்கா, ஜூலையில் தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது கருப்புப் பணம், நிதி முறைகேடு, ஊழல், சட்ட நெறி தவறியது தொடர்பாக 11 புகார்கள் எழுப்பப்பட்டன.

அந்தப் புகார்கள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here