Home உலகம் ஒரே நாளில் இரு கட்சிகள் வெளியேறின முஷரப், கூட்டணி தகர்ந்தது?

ஒரே நாளில் இரு கட்சிகள் வெளியேறின முஷரப், கூட்டணி தகர்ந்தது?

10
0
SHARE

இஸ்லாமாபாத், நவ.13&

தேசதுரோக குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறப்பு நீதிமன்ற விசாரணையிலிருந்து தப்பிக்க துபாய் சென்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் அறிவித்த மகா கூட்டணியிலிருந்து 2 கட்சிகள் வெளியேறிவிட்டன.

74 வயதாகும் முஷரப் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் 1999&இல் ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியவர். பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனசிர் புட்டோவை கொலை செய்ய திட்டம் வகுத்து நிறைவேற்றியதாக முஷரப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பனாமா ஆவண ஊழல் வழக்கை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் நவாஸ் ஷெரீப். அவர் தற்பொழுது கடுமையான மன உளச்சலில் இருக்கிறார்.

நவாஸ் ஷெரீப் மனைவி புற்றுநோயால் அவதிப்படுகிறார். அவருக்கு பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரிட்டனுக்கும் பாகிஸ்தானுக்குமாக நவாஸ் தற்போது பறந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஊழல் வழக்கில் தீர்ப்பு வேறு நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முஷரப், மகா கூட்டணியை அமைந்தார். 23 கட்சிகள்கொண்ட

அந்த கூட்டணியிலிருந்து பாகிஸ்தான் அவாமி தெஹிரிக் என்ற கட்சி முதலில் வெளியேறியது.

பின்னர், மஜ்லிஸ் வாஹ்டாத் இமுஸ்லிமன் என்ற கட்சி இரண்டாவதாக வெளியேறியது. மற்றொரு கட்சி தேர்தல் அரசியலுக்காக முஷரப்பின் மகா கூட்டணியில் நாங்கள் சேரவில்லை என சன்னி இத்தேஹத் கவுன்சில் அறிவித்து உள்ளது.

இந்தநிலையில்

முஷரப், மகா கூட்டணியின் தலைவராக தன்னை தேர்வு செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் திரும்பி நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here