Home தமிழகம் குற்றாலம் & மத்தளம்பாறை சாலையில் உயர்மட்டப்பாலம் முதல்வர் அறிவிப்பு

குற்றாலம் & மத்தளம்பாறை சாலையில் உயர்மட்டப்பாலம் முதல்வர் அறிவிப்பு

15
0
SHARE

சென்னை, நவ.13&

திருநெல்வேலியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்  உருவாக்கப்படும். அனைவருக்கும் வீடு  வசதி திட்டத்தின் கீழ்  ஏழை எளிய மக்களுக்கு  அம்பாசமுத்திரம் நகர், வாகைக்குளம் திட்டப் பகுதியில் 240 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படும். கீழப்பாவூர் ஒன்றியம், பெத்தநாடார்பட்டியில் அரசு கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.  ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குச் சென்று வர ஏதுவாக, கீழப்பாவூரிலிருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட  ராமநதி, ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2ம் கட்டப் பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.4,943 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன உறுதி பெறும் பொருட்டு, கடையம் ஒன்றியம்,  ராமநதி அணை தூர்வாரப்படும்.

நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்படும்.  கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் எலுமிச்சை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டப்படும். அகரம் கிராமத்தில் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.  சுரண்டை கிராமத்தில் அனுமாநதி சிற்றாற்றில் கலக்கும் இடத்திற்கு மேற்புறம் தடுப்பணை கட்டப்படும்.   சுரண்டை கிராமத்தில் அனுமாநதியில் அருந்தவபிராட்டி அணைக்கட்டிற்கு கீழ்புறம் தடுப்பணை கட்டப்படும். சிந்தாமணி கிராமத்தில் கோட்டமலையாற்றின் அச்சந்திகுளம் பிரியும் இடத்தில் படுகை அணை கட்டப்படும். பனையூர் கிராமத்தில் நிசபநதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன உபகரணங்கள், சி.ஆர்ம் கருவி, தாய்சேய் நலப்பிரிவிற்கு நவீன கருவிகள் மற்றும் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். கண்டிகைப்பேரி மருத்துவமனையில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக, அம்பாசமுத்திரம், கோவில்பட்டி, செங்கோட்டை மருத்துவமனைகளில் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் புதியதாக ஒரு மருந்து கிடங்கு கட்டப்படும்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2 டயாலிசிஸ், எண்டோஸ்கோப் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.  புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம், கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்படும். மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக, மாரடைப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும்.   

தாழையூத்து முதல் டக்கரம்மாள்புரம் வரை மதுரை  கன்னியாகுமரி சாலையில் இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும்.திருநெல்வேலி புறவழிச்சாலையில் 4 வழிச்சாலையாக மத்திய தடுப்புடன் (குறுக்கு வடிகால் உட்பட) அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும். இடைக்கால் சேர்ந்தமரம் சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படும். சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படும். ராதாபுரம் இடையன்குடி சாலை ஒரு வழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும்.  சாம்பவர் வடகரை சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படும். திருநெல்வேலி  செங்கோட்டை கொல்லம் சாலையில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படும்.

மதுரை & கன்னியாகுமரி சாலையில் கடவு எண் 4க்கு மாற்றாக ரயில்வே திருநெல்வேலி செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், விஜயாபதி சாலையில் கடவு எண் 82 பிக்குப் பதிலாக நாங்குநேரி  வள்ளியூர் ரயில்வே நிலையங்களுக்கு இடையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். காவல் கிணறு  ராதாபுரம் சாலையில் ரயில்வே கடவு எண் 74பி க்குப் பதிலாக  வடக்கு பணங்குடி மற்றும் ஆரல்வாய்மொழி  ரயில்வே நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்

புறவழிச்சாலைகள்அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மதுரை  கன்னியாகுமரி சாலையில் பழைய ஆற்றுப் பாலத்திற்கு இணையாக தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்படும்.  கரம்பை  பொட்டல் சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். வாசுதேவநல்லூர்  பூலாங்குளம் சாலையில் ஓர் உயர்மட்டப்பாலம் கட்டப்படும்.   செண்பகபுரம்  மீனாட்சிபுரம் சாலையில் ஓர் உயர்மட்டப்பாலம் கட்டப்படும். கோதைச்சேரி சாலையில்   ஓர் உயர்மட்டப்பாலம் கட்டப்படும். ரெட்டியார்பட்டி  விஜயநாராயணம் சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும்.

குற்றாலம்  மத்தளம்பாறை சாலையில்  ஓர் உயர்மட்டப்பாலம் கட்டப்படும்.    அம்பாசமுத்திரம் தாலுகா, கோவிந்தபேரி கிராமத்தில் உள்ள மனோ கல்லூரியில் முதல் மாடியில் கட்டட பராமரிப்புப் பணி  மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும்.   ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் சுரண்டை காமராசர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றிற்குக் கூடுதல் கட்டடங்கள் கட்டித்தரப்படும் என அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here