Home இந்தியா விற்பனைக்கு வரும் ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களின் கதி என்ன?

விற்பனைக்கு வரும் ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களின் கதி என்ன?

6
0
SHARE

புதுடெல்லி, நவ.13&

இந்தியாவைச் சேர்ந்த தேடல் இணையதள நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:&

முக்கிய முதலீட்டு நிறுவனம் பேச்சு வார்த்தையை மேற்கொண்டு உள்ளது. குறிப்பாகஜஸ்ட் டயல்நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் முன்னரே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.இரண்டு நிறுவன அதிகாரிகளும் 2 மாதங்களுக்கு முன்னரே தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டனர். இந்த கையகப்படுத்தல் முடிவுக்கு வர சில நாட்கள் ஆகலாம்.

கூகுள் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது குறித்து இந்த அறிக்கை வெளிவந்த பின்னர் ஜஸ்ட் டயல் பங்குகள் 20 சதவீதம்வரை ஏற்றம் கண்டு வர்த்தகமாகின.

செப்டம்பர் மாத நிலவரப்படி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் 10,892 ஊழியர்கள் உள்ளனர். இந்த ஊழியர்களின் நிலை என்ன என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. கூகுள் நிறுவனம் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெங்களுருவைச் சேர்ந்த ஹல்லி லேப் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்தியது. 2014ம் ஆண்டில் இணையதள பாதுகாப்பு சார்ந்த இம்பீரியம் நிறுவனத்தை கையகப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here