Home சம்பவம் கணவன் தலையில் கல்லை போட்டு கொலை: ‘குடித்துவிட்டு ஆபாசமாக பேசியதால் கொன்றேன் மனைவி...

கணவன் தலையில் கல்லை போட்டு கொலை: ‘குடித்துவிட்டு ஆபாசமாக பேசியதால் கொன்றேன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்

40
0
SHARE

சென்னை, ஆக. 21& சென்னை மணலியில் தினமும் குடித்து விட்டு தொல்லை கொடுத்து வந்த கணவனின், கை கால்களை கட்டிவைத்து, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை கைது செய்தனர். தினமும் குடித்து விட்டு, ஆபாசமாக திட்டியதால், கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை மணலி சின்ன மாத்தூர் சி.பி.சி.எல். நகரை சேர்ந்தவர் துரைராஜ்(47). இவர், பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர் மீது மாதவரம் காவல் நிலையத்தில் இரண்டு குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. இவரின் மனைவி மஞ்சு. இவர்களுக்கு, பிரியா(22), பவித்ரன்(20), ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 17&ம் தேதி அன்று சிறையில் இருந்து துரைராஜ் வெளியில் வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில், துரைராஜ் மது அருந்திவிட்டு, மனைவி மஞ்சுவை ஆபாச வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, தலைக்கேறிய போதையில் இருந்த துரைராஜின் கை கால்களை கட்டிப்போட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து, துரைராஜ் தலையில் போட்டுள்ளார். துரைராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பகக்தினர் ஓடி வந்தனர். அப்போது துரைராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்து மணலி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, துரைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மஞ்சுவை கைது  செய்தனர். துரைராஜை கொலை செய்தது ஏன் என மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

துரைராஜ், குடித்துவிட்டு அடிக்கடி மனைவி மஞ்சுவிடம் தகராறில் ஈடுபடுவராம். கடந்த 3 மாதத்துக்கு முன்பு, போதையில் இருந்த துரைராஜ், தகராறில் மஞ்சுவின் மண்டையை உடைத்து விட்டாராம். இது தொடர்பாக மஞ்சு கொடுத்த புகாரின் பேரில், மணலி போலீசார் கொலை முயற்சி வழக்கில், துரைராஜை கைது செய்து, சிறைக்கு அனுப்பினர்.

அந்த நேரத்தில் மஞ்சு, தனது மகள் பிரியாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதைதொடர்ந்து, துரைராஜ் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, தனக்கு தெரியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்ததை காரணம் காட்டி, மஞ்சுவிடம் தினம் தினம் சண்டை போட்டுள்ளார். மேலும், வீட்டிற்கு வந்திருந்த பிரியாவையும் அடித்துள்ளார். இதனால், மனமுடைந்த மஞ்சு, துரைராஜை கொலை செய்தது தெரியவந்தது. கணவன் தலையில் கல்லைப்போட்டு, மனைவி கொன்ற சம்பவம் மணலி  பகுதியில் பெரும்பரபரப்பை