Home தமிழகம் தேங்கும் மழைநீருக்கு தீர்வு: சாலை அமைக்கும் பணி துவங்கியதுமாணவர்கள் மகிழ்ச்சி

தேங்கும் மழைநீருக்கு தீர்வு: சாலை அமைக்கும் பணி துவங்கியதுமாணவர்கள் மகிழ்ச்சி

13
0
SHARE

திருவள்ளூர், நவ. 13&

திருவள்ளூர் அடுத்துள்ள மணவாளநகரில் சிறுத்தொண்டர் தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 1976&ல் உயர்நிலைப்பள்ளியாக துவக்கப்பட்டது,  பின்னர், 1990&ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

பாதுகாப்புஇல்லாமல்திறந்தவெளியில்இயங்கியஇப்பள்ளிக்குகடந்த 2005&ல் தான் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

தற்சமயம், இப்பள்ளியில் 900 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். 40 ஆசிரியர்கள் உள்ளனர். மழைக்காலங்களில் இப்பள்ளியின் முன்பக்கம் முழுதும் மழைநீர் தேங்கி வெளியேற வழியில்லாமல் இருக்கும்.

அதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மழை நீரில் நடந்து வகுப்புகளுக்கு செல்வார்கள். அப்பொழுது பலர் வழுக்கி மழைநீரில் விழுந்தும் விடுவார்கள்.

இப்படி 41 வருடங்களாக மழை நீரில் நடந்து சென்றவர்களுக்கு இந்த வருடம்தான் தீர்வு கிடைத்துள்ளது.

கல்வித்துறையும், பொதுப்பணித்துறையும் சேர்ந்து பள்ளிக்கு முன்புறம் 150 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளார்கள். இதனால் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.