Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி

8
0
SHARE

வாகனங்களுக்கு எப்படி உரிமம் தேவையோ, அது போலவே ஹாம் வானொலிக்கும் உரிமம் அவசியமாகிறது. உரிமம் பெற வேண்டுமாயின் ஹாம் தேர்வு எழுத வேண்டும். தேர்வுக்குப் படித்தாக வேண்டும். ஆனால் இந்தியாவில் ஹாம் தொடர்பாக கிடைக்கும் புத்தகங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே உள்ளது. தமிழில் இல்லையா? என்று கேட்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இரண்டு புத்தகங்கள் எக்ஸ் க்ளுசிவ்வாக தமிழில் வெளிவந்துள்ளது. ஒன்று, “ஹாம் ரேடியோ ஒரு அறிமுகம்மற்றொன்றுபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோஆகியவை ஆகும்.

ஹாம் வானொலி உரிமத்தினைடிக்கெட்என்றும் அழைப்பர், எப்படி பேருந்தில் பயணிப்பதற்கு டிக்கெட் அவசியமோ, அது போன்றே ஹாம் வானொலி இயக்குவதற்கும், டிக்கெட் அவசியமாகும். ஹாம் தேர்வுக்கு இந்த புத்தகங்கள் நிச்சயம் உதவும். அதே சமயத்தில், உங்கள் பகுதியில் உள்ள ஹாம்களும், ஹாம் மன்றங்களும் தேர்வு எழுத உதவுகின்றனர். குறிப்பாக, ஹாம் குழுக்கள், இதற்காக சிறப்பு வகுப்புகளை இலவசமாகவே எடுக்கின்றன.

ஹாம் தேர்வு எழுதி தேர்வாகிவிட்டால், உங்களுக்கு ஒரு அடையாள குறியீடு (நீணீறீறீ sவீரீஸீ) வழங்கப்படும். அது உங்களுக்கு மட்டுமே உரித்தானது. அது தான் உங்கள் வானொலி நிலையத்தின் பெயர். அந்த பெயரி?லேயே தொடர்ந்து இயங்குவதன் ஊடாக, ஹாம் சமுதயாத்தில் உங்களின் வானொலியும் ஒரு முக்கியமான வானொலியாக பெயர் பெற்றுவிடும்.

தேர்வுக்கு எளிதாக படிக்க

ஹாம் வானொலித் தேர்வுக்கு தயாராக கண்டிப்பாக உங்களிடம் ஒரு சில ஹாம் புத்தகங்கள் இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் ஹாம் தொடர்பாக ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் தமிழில் இல்லை. அந்த குறையை ஓரளவேனும் போக்குவதாகஹாம் ரேடியோ ஒரு அறிமுகமும்”, “ பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோஆகிய புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் ஒரு புத்தகத்தினை இலவசமாகவே வெளியிட்டுள்ளது. ஆனால், அது ()மின்னனு&புத்தகமாக, அவர்களது இணைய தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. தேசிய அமெச்சூர் வானொலி நிறுவனம் (ழிமிகிஸி) ஒரு சில பாடபுத்தகங்களை வெளியிட்டுள்ளது. அது விற்பனைக்கும் கிடைக்கும் அதே சமயத்தில், அவர்களது இணைய தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளனர்.

தமிழகத்தில் பேராசிரியர் பொன்னுசாமி ஆங்கிலத்தில் எழுதிய பிணீனீ ஸிணீபீவீஷீ புத்தகமும், மேற்கு வங்கத்தில் ஒரு சில மன்றங்களும் ஹாம் வானொலித் தொடர்பான ஆங்கில புத்தகங்களை வெளியிட்டுள்ளன. மாநில மொழிகளில் இது தொடர்பான புத்தகங்கள் குறைவே. உலக அளவில் ஏராளமான புத்தகங்கள் விலைக்கும், இலவசமாகவும் கிடைக்கின்றன.

இங்கிலாந்தில்ரேடியோ சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டனும்”, “அமெரிக்க ரேடியோ ரிலே லீக்கும்ஏராளமான புத்தகங்களை ஹாம் வானொலிக்காக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளன. தேர்வுக்கு தயாராவதற்காக, இணையத்திலேயே ஆன்லைன் மாதிரி தேர்வுகளை இந்த அமைப்புகள் நடத்துகின்றன. இவற்றையெல்லாம் படிக்கும் பொழுது, நிச்சயம் ஹாம் தேர்வினை எழுத ஒரு தன்னம்பிக்கை வரும்.

தேர்வுக்கான கேள்விகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவதால், பழைய கேள்வித்தாள்களை சேகரித்து படிப்பதன் ஊடாகவும் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். தேர்வுக்கு தயாராவதற்கு முன், தேர்வுக்கான புத்தகங்கள் புதிய பாடத்திட்டங்களை கொண்டுள்ளதா? என்பதை படிப்பதற்கு முன் பார்த்துவிடுவது நல்லது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள், இணைத்துள்ளனரா என்பதை பார்த்து, அந்த புத்தகம், புதியதா, அல்லது பழையதா என அறிந்து கொள்ளலாம்.

ஹாம் தேர்வுகள்

ஹாம் தேர்வுகளை நேரடியாகவயர்லெஸ் கண்காணிப்பு மையங்களுக்குசென்று எழுதலாம். அல்லது தமிழகத்தல் பல ஹாம் மன்றங்கள் தேர்வுகளை நடத்துகின்றன. அவர்களோடு இணைந்தும் எழுதலாம். சென்னையில்வண்டு நெட்மற்றும்தென் இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டிஏற்பாடு செய்யும் தேர்வுகளில் கலந்து கொண்டும் எழுதலாம்.

ஏற்கனவே கூறியுள்ளபடி இந்த தேர்வானது வறையரைப் படுத்தப்பட்ட உரிமம் மற்றும் பொது உரிமம் ஆகிய இரண்டு வகையான உரிமங்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஹாம் தேர்வானது இரண்டு பகுதிளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதி எழுத்துத் தேர்வாகவும், இரண்டாவது பாகமானது மோர்ஸ் தேர்வாகவும் நடத்தப்படுகிறது. இது பொதுப் பிரிவினருக்கானது.

எழுத்துத் தேர்வில், ரேடியோ தியரி மற்றும் பிராக்டீஸில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தத் தேர்வில் இருந்து பொறியியலில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் படித்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இரண்டாவது பகுதியான தேசிய மற்றும் சர்வதேச டெலிகம்யூனிகேசன் யூனியனின் ஹாம் வானொலிக்கான சட்ட திட்டங்களை மையப்படுத்திய தேர்வினை எழுதியாக வேண்டும். தேர்வின் பாடத்திட்டத்தினை இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.

ரேடியோதியரி

இந்த பகுதியில், மின்சாரத்தைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்.  றிணீssவீஸ்மீ ஞிமீஸ்வீநீமீsல் ரெஸிஸ்டர், இன்டக்டர்ஸ், டிரான்ஸ்பார்மர்ஸ், கேபாசிட்டர்ஸ் பற்றியும், கிநீtவீஸ்மீ ஞிவீஸ்வீநீமீsல் டையோட்ஸ் மற்றும் டிரான்ஸ்ஸிட்டர்ஸ் பற்றியும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். ரிவீக்ஷீநீலீஷீயீயீ’s கரண்ட் மற்றும் வோல்டேஜ் சட்ட திட்டங்கள், கண்டக்டர்கள் மற்றும் இன்சுலெட்டர்ஸ், ஓம்ஸ் லா, கண்டக்டன்ஸ், மின்சாரம் மற்றும் சக்தி, மின்காந்த சக்தியும் ஒலிபரப்பும் போன்றவற்றில் கேள்விகள் கேட்கப்படும்.

கிறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ நீuக்ஷீக்ஷீமீஸீtன் மூலக் கோட்பாடு  சர்க்யூட், இண்டக்டன்ஸ், கேபாசிட்டன்ஸ், இணை சர்க்யூட் போன்றவை பற்றி தெரிந்திருத்தல் அவசியம். செமிகண்டக்டர்களின் மூலக் கோட்பாட்டில், டையோடு, டிரான்ஸிஸ்டர், ஆம்ளிபையர் அமைத்தல்,  ஆசிலேட்டர்,  டிடக்டர்ஸ் ஆகியற்றின் பயன்பாடுகளை அறிந்து கொள்வது நலம்.

வானொலிப் பெட்டிகளில், சூப்பர் ஹேட்ரோடைன் ரிசீவர்கள், மோர்ஸ் குறியீடுகள், ஹாம் வானொலிப் பெட்டியின் குறிப்பிடத்தக்க பணிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஹாம் வானொலி ஒலிபரப்புக்கு எப்படி நல்ல வானொலிப் பெட்டி அவசியமோ, அதேப் போன்று நல்ல ஆன்டனா அமைப்பது முக்கியமாகும். ஆன்டனா எப்படி செயல்படுகிறது?  குறைந்த சக்தியில் ஆன்டனா அமைப்பது, கிரிஸ்டர் ஆசிலேட்டர்ஸ், ஸ்டெபிளிட்டி ஆஸிலேட்டர்ஸ், செமிகண்டக்டர் டிரான்ஸ்மிட்டர் போன்றவை பற்றியும் கேள்விகள் கேட்கப்படும்.

வானொலி அலை பரவலில் (ஸிணீபீவீஷீ கீணீஸ்மீ றிக்ஷீஷீஜீணீரீணீtவீஷீஸீ) மின்காந்த அலைகள் பற்றிய அடிப்படைகள், அலை நீளம், அலைவரிசைகள், ஸ்கிப் ஜோன், இயற்கை இடையூறுகள், ஆன்டனாக்கள் எனும் ஏரியல்கள், அலைவரிசை அளவீடுகள் ஆகியவற்றை படித்துக் கொள்ளுங்கள். ஹாம் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் இரண்டாவது பகுதியை அடுத்த வாரமும் தொடர்ந்து காணலாம்.

ஹாம் ரேடியோ அறிமுகம்

நமதுதின இதழில்தொடர்ந்து வெளியானஇளைஞர்களுக்கான ஹாம் வானொலிதொடரின் தொகுப்புகள் இரண்டு புத்தகங்களாக வெளியாகியுள்ளது. முதல் புத்தகமானஹாம் ரேடியோ ஒரு அறிமுகம்கடந்த மாதம் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் 13 தலைப்புகளில் பயனுள்ள கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக, இந்தத் தொடரில் நீங்கள் படித்த கட்டுரைகள் மட்டுமல்லாது, பல கூடுதல் தகவல்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹாம் வானொலி என்றால் என்ன? ஹாம் வானொலியை எப்படி தொடங்கலாம்? சாப்ட்வேர் டிஃபைன் ரேடியோ, டி.எக்ஸ் என்றால் என்ன? ஹாம் வானொலித் தொடர்பியல், ஹாம் பெயர் காரணம், ஆன்டனா என்ற கம்பி, வானொலி அலைகற்றைகள், வானொலி அலைவரிசைகள், ஹாம் வானொலி நிலையத்தினை தொடங்க, இயற்கையும் வானொலியும் மற்றும் கேட்பது ஒரு சுகம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இந்த புத்தகத்தில் உள்ளன.

இன்று சென்னை அகில இந்திய வானொலியில் அமுத சுரபி ஆசிரியர் முனைவர். திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட உள்ளபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோபுத்தகத்தில், பேரிடர் காலங்களில் செல்போன் செயலி, இயற்கையும் ஹாம் வானொலியும், பேரிடரின் இரைச்சல், ஹாம் மன்றங்கள், பேரிடர் காலங்களில் வண்டு நெட், பேரிடர் வானொலி, பேரிடர் காலத்தில் ஹாம், பேரிடரில் மோர்ஸ், செயற்கைக்கோள் வானொலி, ஹாம் திருவிழாக்கள், ஹாம் வானொலி வழிகாட்டி, ஹாம் தேர்வில் எளிதாக தேர்ச்சி பேற, பேரிடருக்கு முன்னும் பின்னும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.

அப்பொழுதே பல வாசகர்கள், இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? என்று தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக மீண்டும் அச்சிடப்பட்டு இன்று மாலைஇந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம்ஏற்பாடு செய்துள்ளபொது சேவை ஒலிபரப்பு நாளைஒட்டி சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் பல்தட பதிவு அரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கிடைக்கும்.

அடுத்த வாரமும் கேட்போம்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here