Home தமிழகம் செயலற்ற தலைவர்கள் முதல்வராகும் கனவு காண்பதா?மு.க.ஸ்டாலின் மீது ஒ.பன்னீர்செல்வம் மறைமுக தாக்கு

செயலற்ற தலைவர்கள் முதல்வராகும் கனவு காண்பதா?மு.க.ஸ்டாலின் மீது ஒ.பன்னீர்செல்வம் மறைமுக தாக்கு

10
0
SHARE

சென்னை, நவ.13&

செயல் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும், செயலற்ற தலைவர்கள், தாங்கள் முதல்வராகவே ஆகி விட்டதாக, பகல் கனவு கண்டனர் என துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழகத்தின் கலை உலகையும், அரசியல் உலகையும் ஆட்சி செய்து உச்சத்தை அடைந்த தலைவர் எம்.ஜி.ஆர். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாளை, கிருஷ்ண ஜெயந்தி என்று நாம் கொண்டாடுகிறோம். மகாத்மா காந்தி பிறந்த நாளை, காந்தி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். அதைப்போலவே, எம்.ஜி.ஆர். அவதரித்த திருநாளை, ஸ்ரீராமச்சந்திர ஜெயந்தியாக, தமிழக மக்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தெரிந்துக் கொண்ட ஏழை மக்களுக்கு, தெய்வமாக காட்சியும், புரிந்துக் கொள்ள முடியாத எதிரிகளுக்கு புதிராக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.     

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே, தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடும், தமிழர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடும், என்றும் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உள்ளன்போடும்,  தமிழ் நாட்டிற்கு உரிய நிதியும், நீதியும், கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடும் நல்லாட்சி நடத்தி இவை அனைத்தையும், நமக்கு பெற்று கொடுத்துவிட்டு, சென்றிருக்கிறார்.

தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதி மக்களுக்கும், நலத்திட்டங்களை வாரி, வாரி வழங்கி, அன்பு நிறைந்த அட்சயப் பாத்திரமாக  திகழ்ந்தவர் ஜெயலலிதா. அந்த அட்சயப் பாத்திரம், இப்பொழுது விசுவாச கட்சியினரான  நம்மிடம் இருக்கிறது.    அவரின் ஆட்சிதான், இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று, சிலரும், பலரும் திட்டம் போடுகின்றனர். அவர்களின் சதித் திட்டத்தை, தவிடு பொடியாக்கும் ஆற்றல், ஜெயலலிதாவின் விசுவாச உறுப்பினர்களாகிய  நம்மிடம் இருக்கிறது.

எம்.ஜி.ஆர்.உயிருடன் இருக்கும் வரையில், ஆட்சியை பற்றி, கனவு கூட காண முடியாமல் இருந்த தி.மு..வினர், அவர் மறைந்ததும், இனி தமிழகம் தங்களுக்கே என்று தப்புக் கணக்கு போட்டனர். ஆனால், கட்சியினரின் துணையோடு, ஜெயலலிதா அந்த கனவை தவிடு பொடியாக்கினார்.

அதேபோல, ஜெயலலிதா மறைந்ததும், இனி அ.தி.மு.. அவ்வளவுதான், அதன் கதை முடிந்தது, இனி அடுத்து நாம்தான் என்று முடிவு செய்து கொண்டார். செயல் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும், செயலற்ற தலைவர்கள், தாங்கள் முதல்வராகவே ஆகி விட்டதாக, பகல் கனவு கண்டனர்.

ஆனால், இப்பொழுதும், கட்சியினர் அந்த கனவை பொடிப் பொடியாக்கி, ஜெயலலிதாவின் அரசு வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here